தொட்டில் கயிற்றில் விளையாடிய சிறுவன் சாவு…

புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் ( 40). இவரது மனைவி சுகந்தி. இவர்கள் மகன் தீபக் ( 12).  சண்முகம் சரவணம்பட்டியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தீபக் சித்தாப்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். 

சமீபத்தில் இவர்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டில் கயிற்றில் தொட்டில் கட்டி இருந்தனர். அதன் பிறகு உறவினர்கள் சென்றுவிட்ட நிலையில் தொட்டில் கயிறு அவிழ்க்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாலையில் தீபக் தொட்டில் கயிற்றில் தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு விளையாடிய போது எதிர்பாராத விதமாக கயிறு அவன் கழுத்தை இறுக்கியது.

இதில் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் தீபக் மூச்சு திணறி மயங்கினான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகந்தி தீபக்கை  அவசரமாக அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு தீபக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவன்  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் 

One thought on “தொட்டில் கயிற்றில் விளையாடிய சிறுவன் சாவு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *