கோவையில் பூட்டிய வீட்டில் பொருட்களை உடைத்து நாசம் செய்த Soory திருடன்…

கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்த கொள்ளையர் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார் .

பல்வேறு அறைகளுக்குச் சென்று நகைகள், பணம் மற்றும் பொருட்கள் இருக்கிறதா என்று தேடி உள்ளார்.

ஆனால் திருடுவதற்கு உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த பீரோவில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே வீசி உடைத்து விட்டார்.

கட்டில், ஷோகேஸ் போன்ற பொருட்களை கீழே தள்ளி ஆத்திரம் தீராமல் கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் கட்டையால் உடைத்து சேதப்படுத்தினார்.

பின்னர் அவர்
வருத்தப்பட்டு, அங்கு ஒரு சுவரில் ஆங்கிலத்தில் சாரி என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டார்.

கேரளாவில் இருந்து திரும்பி வந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது கொள்ளையர் சாலையில் நடந்து சென்று கொண்டே வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிடுவது பின்னர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை தேடுவது கோபத்தில் பொருட்களை நாசம் செய்யும் காட்சிகள் வீடியோ பதிவாக கிடைத்துள்ளது.தொப்பி அணிந்தபடி, அந்த நபர் வீட்டிலிருந்து தப்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

5 thoughts on “கோவையில் பூட்டிய வீட்டில் பொருட்களை உடைத்து நாசம் செய்த Soory திருடன்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *