கனிம வள முறைகேடு தொடர்பாக புகார் தரலாம்… !

கோவை மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் உரிய அரசு அனுமதியுடனும் அரசு அனுமதித்த அளவில் கனிமங்களை எடுத்துச்செல்கின்றனவா என்பதனையும், வாகனங்களை தணிக்கை செய்து கண்டறியவும் அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக கனிமங்கள் எடுத்து வரப்படின் தொடர்புடைய வாகனங்கள் மீது அபராதம் விடுத்து அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுத்திடவும், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் மீது உரிய அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கவும், அனுமதியின்றி கனிமங்கள் கொண்டு செல்வதை விழிப்புடன் கண்காணித்து தடுக்கவும் வருவாய்த்துறை, கனிம வளத்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறையினை சார்ந்த அலுவலர்களைக் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் மாவட்டம் முழுவதிலும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளிலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் உரிய அரசு அனுமதியுடனும், அரசு அனுமதித்த அளவில் மட்டுமே கனிமங்களை எடுத்துச் செல்ல வேண்டும். மீறுபவர்கள் மீது அரசு விதிகளின் படி வாகனங்கள் கைப்பற்றப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் மற்றும் சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 1800 995 2333 மற்றும் dgmcoimbatore.in என்ற மொபைல் செயலியினை பயன்படுத்தி புகார் தரலாம் என கோவை மாவட்ட கனிம வளத்துறையினர், மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *