படையப்பா வேணாம்பா காசு கொடுப்பா..
கோவையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படையப்பா சினிமா படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இன்று சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் படத்தில் சவுண்டு எதுவும் கேட்காத ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அப்போதும் சவுண்ட் எபெக்ட் வேலை செய்யவில்லை. சினிமா தியேட்டர் நிர்வாகம் ஏதோ செய்து பார்த்தும் சவுண்ட் கேட்கவில்லை. இந்த நிலையில் மௌன ராகமாக படம் ஓட்டப்பட்டது. கொதிப்படைந்த ரசிகர்கள் படையப்பா வேண்டாம் பணத்தை குடுங்க என வாக்குவாதம் செய்தனர். ஆனால் தியேட்டர் நிர்வாகம் பணம் திரும்பி தராத நிலையில் அங்கே பிரச்சினை ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் பணத்தை திரும்ப வழங்க ஒப்புக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
