கள்ள காதலியுடன் தகராறு வாலிபர் தற்கொலை
கோவை இருகூர் டிஎஸ்கே நகரை சேர்ந்தவர் ரமேஷ்(42). இவருக்கு திருமணமாகி தேவிகா (38) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ரமேசுக்கும். அபிராமி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஓராண்டாக மனைவியை பிரிந்த ரமேஷ் ரத்தினபுரி கண்ணப்ப நகரில் அபிராமியுடன் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த 8ம் தேதி ரமேசுக்கும், அபிராமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அபிராமி வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதனால் மனஉளைச்சல் அடைந்த ரமேஷ், வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அபிராமி வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் தட்டியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The slots here are so addictive and the graphics are top notch. I had a great winning streak last night at pgwin233casino.