தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி பேட்டி…

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கமுதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை முழுமையாக வழங்கவில்லை.காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரிய ஆச்சரியம் எதுவும் அளிக்கவில்லை. இத்தொகுதிகளில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தல் முடிவுகளை அதிமுக தலைமை தீவிரமாக ஆய்வுசெய்து சயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

காரணம், தமிழ்நாட்டை அதிக முறை ஆண்ட கட்சி அதிமுக, தற்போது அரிசி) விலை ஒலோவுக்கு 20 ரூபாய் அதிகமாகிவிட்டது. குருவை சாகுபடி சம்பா குறைந்ததே இதற்கு காரணம் தமிழ்நாட்டில் ஊழலை நிச்சயமாக ஒழிக்க வேண்டும். இதை ஒழிக்க அரசு மட்டும் தீவிரமாக செயல்பட்டால் போதாது. அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு பிரசாரம் செய்யாதது இந்த தேர்தலில் எங்களது நிலைப்பாடு. தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. ஆனால், இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனியாக போட்டியிட்டன. அது, அவர்களது நிலைப்பாடு. இந்த தேர்தலை பொறுத்தவரை மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதிமுகவில் ஒரு பாதி ஆதரவாக வாக்களித்தார்கள். ஏற்றொரு பாதி எதிராக வாக்களித்தனர். நாங்கள் நடுநிலை வகித்தோம். பிஜேபி நடுநிலை வகித்தது. அது அப்போதைய நிலைப்பாடு.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு நாங்கள் எடுப்போம். இந்த இடைத்தேர்தலையொட்டி, எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளின் எண்ணங்களை கேட்டுத்தான் இந்த முடிவு எடுத்தோம். கனிய வள கொள்ளையில் ஈடுபட்டவர்களின் சொத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் பணத்தை திரும்ப பெற்று, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.

மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை என நிறைய நடந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விட்டது. பல மாநிலங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

வாக்களிப்பது அடிப்படை உரிமை. வாக்காளர்கள், வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படும். புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசாங்கத்திற்கு அனுபவம் போதவில்லை.

அரசியலும் புதுசு, நிர்வாகமும் புதுசு. அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தின்பேரில் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பல வழக்குகளை தொடுத்து, மேதாது அணை கட்டுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

தவெகவுடன், பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி நாங்கள் யாரிடமும் அமைச்சர் பதவி கேட்கவில்லை. கேட்கப்போவதும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பின்னரே கூட்டணி தொடர்பான நிலைப்பாடு எடுக்கப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பது குறித்து இப்போது ஒன்றும் சொல்ல முடியாது அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

3 thoughts on “தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி பேட்டி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *