K. V

கோவையில் புதிதாக 302 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்..

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ரவுடிகளின் பின்னணிகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் ரவுடியாக வலம் வந்தவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து ரவுடிகளாக வலம் வருகிறார்களா, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்களா, உயிருடன் உள்ளார்களா திருந்தி வாழ்ந்து வருகிறார்களா போன்ற விபரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறை சென்று வந்து மீண்டும், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை…

Read More

கோவையில் நகை கடையில் 40 பவுன் கொள்ளை..!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியில் தங்க நகை அடகு கடை, நகை விற்பனை மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடை பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ரமேஷ் கடைக்கு விடுமுறை அளித்துவிட்டு இரவு குடும்பத்தினருடன் வெள்ளலூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார். இன்று காலை அவர் தனது வீட்டிற்கு திரும்ப வந்தார். அப்போது இவரது கடையின் பின்புற ஷட்டர்…

Read More

கோவை மாநகராட்சியில் 126 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்..!

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் , மேயர் ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் நடப்பு மாநகராட்சி பட்ஜெட்டில் 4915.50 கோடி ரூபாய் வருவாய் மற்றும் மூலதன வரவினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவாக 5041.71 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது . 126 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உக்கடம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஸ்கை வாக் என்ற…

Read More

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா யோக மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி விழா இன்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஆதியோகி சிலை முன்பு லேசர் ஷோ மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில்…

Read More

கோவையில் போதை கும்பல் தாக்குதல் ; 3 பேர் காயம்

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே எம் டி எஸ் பேக்கரி உள்ளது. இந்தப் பகுதியில் கஞ்சா மற்றும் போதை கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பேக்கரி அருகே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர் . அப்போது போதையில் வந்த ஒரு கும்பல் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொடூரமாக தாக்கியது. இதில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ், மார்ட்டின், போஸ் ஆகியோர் காயமடைந்தனர் ….

Read More

சிறுவாணி அணை நீர்மட்டம் 50 சதவீதம் சரிவு குடிநீர் பற்றாக்குறை அபாயம்.. !

கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர், கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோரகிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அணையின் உச்ச பட்ச நீர் மட்டம் 50 அடி. இதில் 44,61 அடி வரை நீர் தேக்க பராமரிப்பு பணி நடத்தும் கேரள நீர் பாசனத்துறை அணுமதி வழங்கியுள்ளது. உச்ச அளவை எட்டும் முன் அணையில் இருந்து எந்த முன் அனுமதியும் இன்றி தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கையாக நடக்கிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 25.22 அடியாக இருந்தது. குடிநீர்…

Read More

கோவை வெள்ளிங்கிரி மலை மகா சிவராத்திரி விழா;1 லட்சம் பேர் சுவாமி தரிசனம்..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ஏழுமலை ஏறி கிரிமலை ஆண்டவர் தரிசனம் செய்தனர். குறிப்பாக காலை நேரத்தில் சூரிய உதயத்தை மலை உச்சியில் இருந்து காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு மலைக்கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் மூங்கில் குச்சி உதவியுடன் கடும் வெயிலில் மலையேறி வெகு…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக எஸ்ஐஆர் பார்வையாளர் ஆய்வு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர் )தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் , கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணியின் போது கடந்த சில ஆண்டுகளில் இறந்த மற்றும் முகவரி மாறி சென்ற 6.5 லட்சம்…

Read More

கோவை மாவட்டத்தில் ஹாகா கிராமங்களில் மனை இடங்களுக்கு அனுமதி தாமதம்

கோவை மாவட்டத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், களிக்க நாயக்கன்பாளையம். இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம். பேரூர் செட்டிபாளையம் சுண்டக்காமுத்தூர் எட்டிமடை, மாவுத்தம்பதி தொண்டாமுத்தூர் நாயக்கன்பாளையம், கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் போன்ற 23 கிராமங்கள் ஹாகா என அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வீடு கட்டடங்கள் கட்ட உள்ளூர் திட்டகுழுமத்தின் அனுமதி வழங்கப்படுவதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் எந்த வித…

Read More

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும்.. அமைச்சர் கோவி செழியன் பேட்டி..

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை,திருப்பூர் கரூர் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது . இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கோவை மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி தலைமையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது; திமுக எம்பி…

Read More