K. V

கோழிக்கறி விலை ஏன் ஏறி போச்சு..

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் ,“விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர். உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது. வெறும்…

Read More

போதை நபரை தாக்கிய பெண்கள்..

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாச முறையில் பேசியதாக தெரிகிறது. கோபமடைந்த பெண்கள் பஸ்ஸில் வைத்து அவரை சரமாறியாக தாக்கினார். பின்னர் அவரை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டனர். ரேஸ் கோர்ஸ் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதியில் ரத்த காயம் உடன் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினார்களா அவரை…

Read More

ஏய் ஏறி வாயா, விடாத.. பயர் மேன்களுக்கு பயிற்சி..

கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மண்டல அளவில் 41 தீயணைப்பு துறையினருக்கு கமாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றை நீந்தி கடப்பது, உயரமான கட்டடங்களில் ஏறுவது, அபாயகரமான கட்டடங்களில் ஆட்களை மீட்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று அலுவலகத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் கயிறு மூலமாக ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் மயக்கமடைந்தவர்களை கயிறு மூலமாக கீழே இறங்குவது குறித்த செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது.

Read More

பழங்கால சின்னங்களை வைத்து சர்வே துறையினர் ஆய்வு..

கோவை மாவட்ட நில அளவை துறை சார்பில் கோவை மாவட்டத்தில் நில அளவை வரலாற்று சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ள பகுதிகளில் கள ஆய்வுப் பணி நேற்று நடந்தது. கோவை மாவட்ட நில அளவைத் துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில்புதிதாக சர்வேயர்களாக பணியில் சேர்ந்த 64 பேர் கள ஆய்வு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பெரிய முக்கோணவியல் நிலையம் , பெஞ்ச் மார்க் என அழைக்கப்படும் கடல் மட்ட உயர எல்லைப் பகுதி, கோர்ஸ்…

Read More

சேற்றில் விழுந்து உயிருக்கு போராடும் யானை..

கோவை தொண்டாமுத்தூர் குப்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெண் யானை ஒன்று சுற்றி சுற்றி வந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிய அந்த யானை இன்று காலை நீர் தொட்டி அருகே உள்ள சேற்றில் கால் வைத்து தடுமாறி கீழே விழுந்தது. அதற்குப் பிறகு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இது தொடர்பாக கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜேசிபி மூலமாக சேறு இருந்த பகுதியை அகற்றி யானையை எழ வைக்க முயன்றனர். ஆனால்…

Read More

ரூ250 கோடியில் கோவை ரயில்வே ஸ்டேஷன் டெர்மினல்..!

கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் முதலில் போத்தனூர் தலைமை இடமாக கொண்டு 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் தற்போது 7 பிளாட்பாரங்களுடன் இயங்கி வருகிறது.  தினமும் 120க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். தென்னக ரயில்வேயில் இந்திய ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டி தரும் 2 வ து ரயில் நிலையமாக கோவை ஜங்ஷன் ரயில் நிலையம்…

Read More

காட்டூர் கடையை சாம்பலாகிய வெல்டிங் ..

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதி ஆட்டோ மொபைல் கடை மற்றும் குடோன் நேற்று தீ பிடித்தது. இதனால் கோவை நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த கோர தீ விபத்தின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த கடையில் மேல் தளத்தில் எலிவேஷன் ஃபைபர் அமைக்க வெல்டிங் பணி நடத்தப்பட்டு இருக்கிறது. ‌ பணி முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ பரவி உளளது. வெல்டிங் மூலமாக விழுந்த தீக்கனல்…

Read More

பைன் லிங்க் தொட்டீங்க கெட்டீங்க..!

கோவை கணபதி அருகே உள்ள சங்கனூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மொபைல் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்து விதிமீறல் செய்து உள்ளீர்கள் என்றும் அதற்கு உரிய அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து எஸ்எம்எஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. மேலும் அபராத தொகை செலுத்த லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த செல்வகுமார் செல்போனில் வந்த அந்த லிங்கை தொட்டுள்ளார்….

Read More

உச்சா போனா உதை.. நகை பணம் இழந்த வாலிபர்

கோவை சாய்பாபா காலனி பாலசுந்தரம் வீதி பகுதியை சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா வளாகத்திற்கு சென்றார். அங்கே மறைவான பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது அந்த வழியாக காரில் வந்த ஒண்டிப்புதூர் எஸ் எம் எஸ் லே-அவுட் பகுதி சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25)…

Read More

தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் மூன்று மாடி கட்டிடத்தில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை மற்றும் குடோன் உள்ளது. இன்று மாலை 4மணியளவில் கடையில் தீ பிடித்தது. தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. அங்கே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்து கடையில் இருந்தவர்களும் தீ மற்றும் புகையை பார்த்து உடனடியாக வெளியே வந்தனர் . இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல…

Read More