K. V

பிரிட்டிஷார் கொண்டாடிய வெரைட்டி ஹால் ரோடு…

கோவை போத்தனூரில் ஆங்கிலேயர் காலனி இருந்தது. அங்கே 400க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தினமும் இரவில் ஆங்கிலேயர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஜாலியாக பொழுது போக்குவார்கள். அவர்களின் இரவு ஆட்டத்திற்கு கோவையில் எங்கேயும் கேளிக்கை விடுதி கிடையாது. அப்போது கோவையில் பிரபலமாக இருந்த வின்சென்ட் சாமிக்கண்ணு (இவர் பெயரில் உக்கடத்தில் ரோடு உள்ளது) ஒரு கேளிக்கை விடுதி கட்டினார். அந்த விடுதியில் நடனம், நாட்டியம், நாடகம் நடக்கும். சினிமா பார்க்க ஆங்கிலேயர்கள் விரும்பினால் பெரிய திரை…

Read More

சோகத்தையும் பாரத்தையும் ஏற்ற சுமைதாங்கிகள்…

பெருவழிகளில் வணிகர் தங்கி செல்ல தாவளம் என அழைக்கப்படும் தங்கும் சாவடி உருவாக்கப்பட்டது. பொது இடத்தில் பொது ஜனங்கள் இந்த இலவச தங்கும் கூடம் ஏற்படுத்தப்பட்டது. சாவடிகள் 5 மைல், 10 மைல் தொலைவுகளில் அமைந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் பயணம் கால்நடையாகவே அமைந்தது. பாலக்காடு கணவாய் வழியாக மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு வழியாக உருவாக்கப்பட்டன. ஆனைமலை வடபூதி நத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன்குளம் செல்லும் வகையில்…

Read More

வன பொக்கிஷங்கள் நிறைந்த காஸ் பாரஸ்ட் மியூசியம்…

கோவை வனக்கல்லூரி வளாகத்திற்குள் 120 ஆண்டு கால பெருமை மிக்க காஸ் பாரஸ்ட் மியூசியம் உள்ளது. மத்திய வனத்துறைக்கு சொந்தமான இந்த மியூசியம் கடந்த 1906ம் ஆண்டில் எச்.காஸ் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதில் 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த யானை, காட்டெருமையின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த கால ஆதிவாசிகள் பயன்படுத்திய கூராங்கல் கத்தி, மான், முயல், கேழை ஆடுகளை வேட்டையாட பயன்படுத்திய ஈட்டி, தேக்கு இழை ஆடை மண் சொப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில்…

Read More

நூற்றாண்டை கடந்த கோவை வனக்கல்லூரி…

கோவை மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலம் அருகே கடந்த 1912ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஆங்கிலேயர்களால் ‘மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ்’ துவக்கப்பட்டது. கோவை சர்க்கிள் வன பாதுகாவலராக பணியாற்றிய சி.ஐ.எப் லாட்ஜ் என்பவர் இந்த கல்லூரியை துவக்கினார். 195 ஏக்கரில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வனக்கல்லூரி துவங்கியது. தற்போது இங்கே பல ஆயிரம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ் கடந்த 1955ம் ஆண்டில் தென்னக வனசரகர் கல்லூரியாக மாறியது. தமிழகம், கேரளா,…

Read More

கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள்…

கற்கால மனிதர்களின் ஆயுதம் கற்கள் என்பது அனைவரும் அறிந்தது தான் .ஆனால் அந்த கற்களின் வகைகள் ஆயுதம் தயாரித்த விதம் பலருக்கு தெரியாது. பழைய கற்காலத்தின் இறுதியில் அகேட் சால்சிடோனி செர்ட் கார்னீலியன் ஜழஸ்பர் ஆப்சீடியன் குவார்ட்ஸ் கற்கள் தான் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் கைப்பிடியுடன் அமைந்திருந்தன. சில கற்களை கொடுவாளாகவும் கத்தியாகவும். குத்தீட்டியாகவும் பயன்படுத்தினர். கற்கால கருவிகள் பிளேட் ப்யூரின் லூனேட் முக்கோணத்தில் இருந்தன. இந்த கருவிகள் கி மு 10 ஆயிரம்…

Read More

ஆயிரம் ஆண்டுகள் கடந்த புதை உயிரி எலும்பு படிமங்கள்…

மரணத்திற்கு பின் மனித உடல் நிலம், நீர், நெருப்பில் அழிந்து போய் விடும் இறப்பிற்கு பின் மனித உடலை அழியாமல் பாதுகாக்க ஆதிகால மக்கள் ஆர்வம் காட்டினர். இதற்காக தாழி, ஈம பேழைகள் உருவாக்கப்பட்டன .இதிலும் 200 முதல் 300 ஆண்டுகள் வரை மட்டுமே மனித எலும்புகளை பாதுகாக்க முடிந்தது. ஆனால் அரிதாக அபூர்வமாக பாறைகளில் சிக்கிய ரசாயன மாற்றத்தால் பாதிக்கப்படாத சில மனித எலும்புகள் புதை உயிரி எலும்பு படிமங்களாக பாசிலைஸ்டு போன் பிரக்மெண்ட் ஆக…

Read More

தாழியால் உருவான ஊர்

கோவையின் எல்லையில் அமைந்துள்ள வன கிராமம் சாடிவயல், எப்போதும் நீர் வளத்துடன் காணப்படும் இந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழிகள் கண்டறியப்பட்டது. இறந்தவர்களை அடக்கம் செய்ய இந்த முது மக்கள் தாழியை ஆதி காலத்தில் சாடி என அழைத்துள்ளனர். 6 அடி உயரம் மிக்க கூம்பு வடிவிலான இந்த பானையில் இறந்த முன்னோர்களை அடக்கம் செய்துள்ளனர். இந்த பானையில் அடக்கம் செய்து விட்டால் இறந்தவர்களின் ஆத்மா நிம்மதியாக இருக்கும் என கருதினர் . கோவை மாவட்ட…

Read More

கோனியம்மன் கோயிலில் உண்டியல் கொள்ளை : ஊழியர்கள் 4 பேர் கைது

கைதான பாலசுப்பிரமணியன் மற்றும் சரவணன் கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து நேற்று…

Read More

டிப்பர் லாரி மோதி மாணவி சாவு

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் அபிராமி நர்சிங் கல்லூரி உள்ளது. இன்று மதியம் இந்த கல்லூரியில் நர்சிங் படித்து வரும் மாணவி அனுஸ்ரீ (21) தனது தோழிகள் இரண்டு பேருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லூரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பைபாஸ் ரோடு கடந்து அவர் கல்லூரிக்கு செல்ல முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடன்…

Read More

வாடகை தராத 10 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் கோவை மாநகராட்சி சார்பில் வணிக கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பல கடைகளில் உரிய முறையில் வாடகை வசூலிக்கப்படுவதில்லை என புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆரோக்கியசாமி ரோடு டிபி ரோடு துடியலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாடகை தராத 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடைகளில் இருந்து 56 லட்ச ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதுவரை 26.34 லட்ச ரூபாய் வசூல்…

Read More