K. V

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி…

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் சமூக வழி நடத்துனர்களை கொண்டு செப்டம்பர் மாதம் வரை வீடு வீடாக சென்று சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை பதிவு செய்ய குடும்ப அட்டையை மட்டும் வழங்கினால் போதுமானது. தங்களது இல்லங்களில் மாற்றுத்திறனாகளிகள் இருப்பின் அடையாள அட்டை வைத்துள்ளோர் அவர்களது முழு விவரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள…

Read More

டாஸ்மாக்கில் அசுத்தம்: சரி பண்ணாம அலட்சியம்…

கோவை மாவட்டத்தில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் ‘பார்’கள் உள்ளன. இந்த கடைகள், ‘பார்’கள் உள்ள பகுதிகளில் அசுத்தம் அதிகமாகி விட்டது. குப்பை, மது பாட்டில், உணவு பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை அகற்றாமல் குப்பையோடு குப்பையாக ‘பார்’களை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர், போதை ஏறி, சாலையோரம் மற்றும் ‘பார்’ வளாகங்களில் கிடக்கிறார்கள், அசுத்த சூழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘பார்’களில் சுகாதார சீர்கேட்டுன் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு…

Read More

அவிநாசி ரோடு மேம்பாலம்: வாஹன் வெப்சைட்டில் விதிமுறை மீறல்களுக்கு அபராதம் போட தடை…

கோவை அவினாசி ரோட்டில் ஏஐ கேமராவில் பதிவாகும் வாகன விதிமீறல்களுக்கு மத்திய அரசின் வாகன் வெப்சைட் தளத்தில் அபராதம் விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு…

Read More

face recognising: மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்…

face recognition system மூலமாக கைதான கார்த்திக்… கோவை நகர், புறநகரில் மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பேஸ் ரெககனிஷன் முறையில் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகர், புறநகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்ட நபர்கள் பலர் ஜாமீனில் வருகின்றனர். சிலர் மீண்டும் போலீசில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகி விடுவார்கள். திருட்டு, கொலை, போதை பொருள் கடத்தல்…

Read More

பிரதமர் உருவ பொம்மை விவகாரம் தொடர்பாக பாஜக புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரமேஷ் குமார், நந்தகுமார் உள்பட கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்கள்மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவகல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பாக அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. ஆனால் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட…

Read More

பாழாகி போச்சு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டடம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பிரிவு அமைந்துள்ளது. இதில், பழைய மற்றும் புதிய கட்டடம் இருக்கிறது. புதிய கட்டடத்தில் அலுவலக பிரிவு செயல்படுகிறது. 70 ஆண்டிற்கு முன் கட்டிய பழைய கட்டடத்தில் மாற்று திறனாளிகளுக்கான பொருட்கள், பல்வேறு ஆவணங்கள், பயிற்சிகள், மருத்துவ சோதனைகள் நடக்கிறது. மாற்று திறனாளிகள் அதிக நேரம் பழைய கட்டடத்தில் தான் காத்திருக்கின்றனர். இந்த கட்டடத்தின் கூரைகள் கீழே சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. மழை காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர்…

Read More

Drone survey: பாதாளம் வரை தோண்டிய கல் குவாரிகள் விரைவில் மூடல்…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த 2 மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து…

Read More

நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம்…

மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பினர் இன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக 40க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலைய சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர்…

Read More

கோவை மாநகராட்சியில் 132 டெண்டர் ரத்து

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் 100 வார்டுகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. முன்னதாக இந்த பணிகளுக்கு மாநகராட்சி. நிர்வாகத்தின் அனுமதி (ஏ சேங்சன்) வழங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு சி சேங்சன் அதாவது கவுன்சில் கூட்டத்தில் வைத்து தீர்மான ஒப்புதல் தரப்படவில்லை. மாநகர் முழுவதும் மழை நீர் வடிகால், தடுப்பு சுவர், போர்வெல், கழிவறை என பல்வேறு திட்ட பணிகள் துவக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதில் சில திட்ட பணிகள் ரத்து…

Read More

1.58 லட்சம் மின் கம்பங்கள் வாங்க டெண்டர்…

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மின் மண்டலங்களில் 1.58 லட்சம் மின் கம்பங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போதும் மின் கம்பம் இல்லாததால் மின் வினியோகம் செய்யப்படாமல் இருக்கிறது. மின் கம்பங்கள் பழுதினால் இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், வணிக வர்த்தக தொழில் நிறுவனத்தினர் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்…

Read More