K. V

ஆளில்லாத வீடுகள்… 3 லட்சம் பேரிடம் கைரேகை வாங்க ரேஷன் கடை ஊழியர்கள் தீவிரம்

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (பயோ மெட்ரிக்) அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. 3,97,782 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக்…

Read More

காத்து வாங்குது காஸ் பாரஸ்ட் மியூசியம்…

கோவை வனக்கல்லூரி வளாகத்தில் காஸ் பாரஸ்ட் மியூசியம் அமைந்துள்ளது. இதில் வன விலங்குகளின் உடல் பாகங்கள், எலும்பு, தோல், பல்வேறு வன பொருட்கள், மரங்கள், வேர், அரிதான பொருட்கள், பழங்கால வனத்துறையினர் பயன்படுத்திய வேட்டை கருவிகளான ஈட்டி, ரம்பம், கத்தி, அரிவாள், கோடாரி, 100 ஆண்டுகளுக்கு முந்தைய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பழங்கால கற்கள், வேதிப்பொருட்கள் குடுவையில் வைக்கப்பட்ட பாம்பு போன்றவை வைக்கப்பட்டிருக்கிறது. யானைகளின் முழு உடல், தந்தம், காட்டெருமை, சிறுத்தையின் தத்ரூப தோற்றம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது….

Read More

கலெக்டர் அலுவலக சுவர் மீது மரம் விழுந்தது

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த புங்கன் மரம் இன்று சாய்ந்து விழுந்தது. இதில், இரு கார் சேதம் அடைந்தது. ஒரு கார் மரக்கிளைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு – அலுவலர் சலீம் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மிஷின் ரம்பம் மூலமாக மரக்கிளைகளை அகற்றி இடிபாடுகளில் இருந்து கார்களை மீட்டனர். மேலும், அந்த பகுதியில் சில கார்கள்…

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம் பணி அடுத்த மாதம் துவக்கம்…

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது . ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110…

Read More

சிறுவாணி அணையில் தூர் எடுப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை 22.46 சதுர கிலோமீட்டர் பரப்பில் நீர்த்தேக்க திறனுடன் அமைந்துள்ளது. இந்த அணை கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது . அதிலிருந்து இப்போது வரை அணை தூர்வாரப்படவில்லை . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர் அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டாமல் இருப்பதால் முழு அளவில் குடிநீர் எடுக்க முடியாத நிலைமை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் தற்கொலை முயற்சி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிகளவு பெண்கள் குவிந்து மனு அளித்தனர். சில பெண்கள் ஏற்கனவே நாங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்து விட்டோம். ஆனால் அந்த மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காணவில்லை. எங்களது மனுக்களுக்கு 15…

Read More

பாதையில் தூங்கறாங்க, பரிதாபத்தில் கோவை ஜிஎச்…

கோவை அரசு மருத்துவமனையில் 1200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, எலும்பு முறிவு வார்டு, நரம்பியல் வார்டு போன்றவற்றில் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், பார்வையாளர்களாக மருத்துவமனை வளாகத்தில் தங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது. பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் போதுமான இட வசதி செய்து தரவில்லை. பிரசவ வார்டின் முன் பார்வையாளர்கள் கூட்டம்…

Read More

பச்சை கலருக்கு மாறிய உக்கடம் வாலாங்குளம்…

உக்கடம் வாலாங்குளத்தில் அதிக அளவு ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் இருந்த ஆகாய தாமரைகளை கடந்த இரண்டு வாரங்களாக ஜேசிபி மூலமாக அகற்றினார். அகற்றப்பட்ட கழிவுகளை குளக்கரை ரோட்டில் குவித்து வைத்தனர். இந்த நிலையில் அந்த கழிவுகளில் அழுகிப்போய் தற்போது துர்நாற்றம் மேலும் அதிகமாகி விட்டது. கழிவுகளிலிருந்து அசுத்த நீர் வடிந்து மறுபடியும் குளத்திற்குள் சென்று விட்டது. இதனால் குளக்கரையில் குடலை குமற்றும் வகையில்…

Read More

NO depression: தோல்வியா கவலை படாதீங்க… அண்ணாமலை பேச்சு

கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 2025-2026ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு, கல்வி ஊக்க தொடை வழங்கும் விழா இன்று நடந்தது. இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவில் ராம்ராஜ் குழும தலைவர் நாகராஜன், டாலர் குரூப் தலைவர் ராமமூர்த்சி, ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கொங்கு நண்பர்கள் சங்க…

Read More

கோவையில் 7 ஆண்டு தலை மறைவு கொலை வழக்கு குற்றவாளி கைது

கோவை பேரூர், சுண்டக்காமுத்தூர் வையாபுரி தெருவைச் சேர்ந்த கார்த்திக் (39). இவர் மீது பேரூர் போலீசில் கொலை, கொள்ளை மற்றும் வீட்டில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த கமலம் (70) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த கார்த்திக், அவர் கூச்சலிட்டதால் வீட்டிலிருந்த அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்க…

Read More