NO depression: தோல்வியா கவலை படாதீங்க… அண்ணாமலை பேச்சு

கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 2025-2026ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு, கல்வி ஊக்க தொடை வழங்கும் விழா இன்று நடந்தது.

இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவில் ராம்ராஜ் குழும தலைவர் நாகராஜன், டாலர் குரூப் தலைவர் ராமமூர்த்சி, ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கொங்கு நண்பர்கள் சங்க தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் நந்தகுமார், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதில் த லீடர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த 2000ம் ஆண்டு தனது லட்சியத்தை சொல்லிய நபரை அலட்சியமாக பார்த்தார். அவர் அன்று சொன்னதை செய்து காட்டியவர் எலன் மஸ்க் மாணவ மாணவிகள் தங்கள் இலக்கை நோக்கி செல்ல வேண்டும். அப்பட அம்மாவிடம் தெரிவித்து உங்கள் பேஷனை நோக்கி போக வேண்டும். பல முறை தேர்தல் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்தவர் ஆப்ரகாம் லிங்கன். அவர் ஜெயித்த ஒரே தேர்தல் அமெரிக்க ஜனாபதி தேர்தல் அவர் கொண்டு வந்து திட்டங்கள் ஏராளம்.

எனவே உங்களை நீங்களே முன்னேற்றி வாருங்கள் எப்போதும் உழைத்து கொண்டிருங்கள். ஒரு பாதுகாப்பான சூழலில் எப்போதும் இருந்தால் முன்னேற்றத்தை எட்ட முடியாது தேர்வுக்கு படியுங்கள், அதில் வெற்றி கிடைக்காவிட்டால் கவலை பட வேண்டும். இன்றைய இளைஞர்களுகஅக எதற்கு எடுத்தாலும் மன அழுத்தம். நீட் தேர்வில் தோல்வியா, உடனே மன அழுத்தம், காதலில் தோல்வியா மன அழுத்தம். ஏன் இப்படி இருக்க வேண்டும்.

தோல்வியுடன் நாம் நட்பு வைத்து கொள்ள வேண்டும். அடுத்த முறை முயற்சி செய்து இலக்கை அடையலாம். வெற்றியாளர்களை மட்டுமே பார்க்க கூடாது. அவர்கள் கடந்து வந்த தோல்வியை பார்க்க வேண்டும். 46 ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் ராக்கெட் அனுப்பியுள்ளனர். அரசு இல்லாமல் தனியாக 10 ஆண்டு போராடி 2 பேர் இதை செய்திருக்கிறார்கள்.

ஒரு செயலை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு தேவையான அளவு யாரும் முயற்சிக்கவில்லை என அர்த்தம் கடந்த காலங்களை பார்த்தால், குறிப்பாக தாத்தா காலத்தில் இருந்த சூழ்நிலை வேறு. அப்பா. அம்மா காலத்தில் வேறு மாறி இருந்தது இப்போது உலகில் 4வது பெரிய வளர்ந்த நாடாக இந்தியா இருக்கிறது. அரைச்ச மாவை திரும்ப அரைக்காம புதிதாக சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுக்கு என ஒரு ஆலோசகர் வைத்து கொள்ள வேண்டும்.

எதாவது துறையில் வளர்ந்து சிறப்பாக இருப்பவரின் தொடர்பு எண் வாங்கி அவரிடம் எதாவது ஒரு நாள் ஆலோசனை செய்யலாம். உபயோகமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *