K. V

பீளமேட்டில் கருப்பு கொடி போராட்டம்

கோவை பீளமேடு ரயில்நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் சுரங்கப்பாதை அமைக்காமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே கடந்த 2017-ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் செல்லும் நிலையுள்ளது. இப்படி செல்லும் போது ரயிலில் அடிப்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக…

Read More

உதவி கேட்டு குவிந்த மாற்று திறனாளிகள்

மாற்று திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாற்று திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 250க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மனு கொடுத்தனர். மூளை முடக்குவாத நோய் பாதிப்பில் இருந்தவருக்கு மொபட் வழங்கப்பட்டது. சிலர் மொபட் கேட்டும், மூன்று சக்கர வாகனம், செயற்கை அவயங்கள், முதல்வர்…

Read More

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நன்கொடை முறைகேடு… ?!

கோவை மண்டல இந்து கோயில் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் முத்து கணேசன் கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சில முறைகேடுகளும் திருட்டுத்தனங்களும் நடக்கிறது. ராஜகோபுர பணிக்காக பக்தர்கள் நிறைய பேர் நன்கொடை கொடுத்துள்ளார்கள். அந்த பணம் முறையாக இந்து சமய அறநிலையத்துறை வங்கி கணக்கு வைக்காமல் ஒரு நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைத்து பணி செய்கிறார்கள்….

Read More

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தபால் தந்தி அலுவலகம் கோர்ட் பள்ளிகள் பாஸ்போர்ட் அலுவலகம் ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. அரசியல் மற்றும் சினிமா தொடர்பு நபர்கள் பெயர்களை குறிப்பிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டு ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டு இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிர்வாக மற்றும் ஆசிரியர் தொடர்பான பிரச்னைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் பதிவாளர் அலுவலகம் முன்பு இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த் தலைமையில், செயலாளர் உமாதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை அளிக்க பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பதிவாளர் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் தங்களின் கோரிக்கையை…

Read More

சொத்து பறிச்சிட்டு துரத்திட்டாங்க… கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கண்ணீர் மனு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நஞ்சுண்டாபுரம் பகுதி ரேணுகா (60) என்பவர் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் 2 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். என் கணவர் பெயரில் உள்ள வீட்டில் நான் வசிக்கிறேன். என் கணவர் பெயரில் உள்ள சொத்து பத்திரம் காணவில்லை. நான் வீட்டில் இருந்து வெளியே…

Read More

மோசடி நபரை போலீசார் விசாரிக்கலை… ஆதிவாசி பெண்கள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் காரமடை கோபநாரி தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் முற்றுகையிட்டு குவிந்தனர். அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம் நட்பாக பழகினார். அவர் எங்களிடம் தனித்தனியாக பணம் நகை வாங்கினார். சில நாட்களில் திருப்பி தருவதாக கூறி அவர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என பலரிடம் பணம், நகை வாங்கினார்….

Read More

போலீஸ் வாங்கிய லஞ்ச பணத்தை தர சொல்லுங்க… கோவையில் விவசாயிகள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த வாரம் கோவில்பாளையம் பகுதி விவசாய தோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்தார்கள். நீரா பானம், கள் விற்பனை செய்தால் அதற்கு லஞ்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் கேஸ் போடுவோம் என மிரட்டியுள்ளார்கள். நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மாமூல் கேட்கிறார்கள். 4…

Read More

தெரு நாய் தொல்லை… வண்டியோடு சுத்தும் கோவை மாநகராட்சி…

கோவை மாநகர பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, சிங்காநல்லூர், குனியமுத்தூர்,ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணிக்கு செல்வோரை நாய்கள் கூட்டமாக துரத்துவது வாடிக்கையாக உள்ளது. மாநகரில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டது. ஒரே மாதத்தில் 500க்கும் மேற்பட்ட நாய்கள்…

Read More

குளத்தில் ஆபத்தான முறையில் போட்டோ எடுக்கும் வாலிபர்கள்…

கோவை தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ண குளம் கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது. நடைபாதை, பூங்கா, செல்பி பாயிண்ட், விளையாட்டு கூடம் போன்றவை அமைக்கப்பட்டது. குளத்தின் மீது நின்று போட்டோ எடுக்கும் வகையில் |மிதவை பாலம் பகுதியும் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியில் உயரமான இரும்பு தடுப்பு அமைக்காமல் விட்டதால் வாலிபர்கள் சிலர் அதன் மீது ஏறி நின்று ஆபத்தான வகையில் செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள். சிலர் கம்பி மீது ஏறி…

Read More