K. V

ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை..!

கோவை காரமடை சீலியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆடுகளை சிறுத்தை அவ்வப்போது வேட்டையாடி வருவதாக தெரிகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சிறுத்தை இதுவரை பிடிக்கப்படவில்லை. சிறுத்தை தொடர்ந்து ஆடுகளை கொன்று தின்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மஸ்தான் என்பவரின் பட்டியில் இருந்த ஆடுகளை சிறுத்தை பிடித்து சென்றது. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க சொல்லி திடீர்…

Read More

எஸ்பி வேலுமணியின் ‘வலது கரம்’ இன்ஜினியர் சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில்..!

கோவை மாவட்டத்தில் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் இன்ஜினியர் சந்திரசேகர். வடவள்ளி மற்றும் வடக்கு தொகுதி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் எளிதில் அணுகும் நபராக காணப்பட்டார். பல்வேறு அரசு திட்ட பணியை செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார். இவர் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பின்னர் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு இவர் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இவர் கோவை மாவட்ட…

Read More

காட்டு பன்றிகளை சுட்டு தள்ளுங்க… விவசாயிகள் ஆவேசம்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் வனத்துறை, மின் வாரியம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள், வேளாண்மை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயி நாயக்கன்பாளையம் தேவராஜ் புகார் அளித்து பேசுகையில், “”வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும். கடந்த 15 ஆண்டாக வன விலங்குகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. இப்போது உச்ச கட்டமாக அதிகமாகி…

Read More

பறவையே எங்கு இருக்கிறாய். ..

உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகள் என இரண்டிற்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இருப்பதால் தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இருவாட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) உள்ள வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி நிறுவனம். சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம்,…

Read More

தவெக லிஸ்டிலேயே இல்லையேப்பா…

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியில் வெளியிடும் முன்னர் அரசியல் கட்சியினர் ஆலோசனை பெறப்பட்டது. மேலும் சிறப்பு முகாம் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்திலும் 12 அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் கோவை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லையாம். குறிப்பாக பூத் லெவல் ஏஜென்ட் 1, பூத் லெவல் ஏஜென்ட் 2 பட்டியலில் தமிழக வெற்றி கழகம்…

Read More

20 லட்ச வாக்காளர்களை நீக்கியது எப்படி… தேர்தல் கமிஷன் கோவையில் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தேர்தல் கமிஷனர் பானுபிரகாஷ் யக்ரூ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டனர். பட்டியலில்…

Read More

வியாதி சொல்லாம வருது… கேஜி பக்தவச்சலம் ஜாலி பேச்சு..

கோவை கே ஜி மருத்துவமனை சேர்மன் பக்தவச்சலம் அவரது மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். நரம்பியல் பிரிவிலிருந்த பெண் நோயாளிடம் எப்படி இருக்கீங்க , என்ன வைத்தியம் செய்ய வந்தீங்க என கேட்டார். இங்க வந்தா அன்பா பாத்துக்குறாங்க. நான் மட்டும் இல்ல என் குழந்தை, என் அம்மா, எங்க பாட்டி கூட உங்க பேஷண்ட் தான் என்றார். அப்படியா என கேட்ட சேர்மன் பக்தவச்சலம், ” பக்கத்தில் இருந்த வாலிபரிடம் இவருக்கு சின்ன வயசு…

Read More

மருதமலையில் குட்டி கருஞ்சிறுத்தை மீட்பு..

கோவை மருதமலை தொழு நோயாளிகள் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டது. தாயைப் பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த இந்த குட்டி சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு கூண்டில் அடைத்துள்ளனர். தாய் சிறுத்தை எங்கே இருக்கிறது என வனத்துறை என தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் மருதமலை வனப்பகுதியில் காணப்பட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த சிறுத்தை சுற்றிக் கொண்டிருந்தது. இதனுடன் இருந்த இந்த குட்டி சிறுத்தை வழி மாறி வந்திருக்கலாம் என தெரிகிறது….

Read More

மாணவியிடம் மானங்கெட்ட செயல்.. ஏட்டுக்கு ரிவீட்டு..

சென்னையிலிருந்து கோவைக்கு இரவு ரயிலில் கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அருகே அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் தூங்குவது போல் நடித்து அந்த மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அந்த மாணவி எச்சரித்தும் அந்த நபர் திருந்தவில்லை. இந்த நிலையில் மாணவி தன்னிடமிருந்த செல்போனில் அந்த நபரின் சேட்டைகளை வீடியோ பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் கோவை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். கோவை ரயில் நிலையம் வந்து இறங்கிய அந்த நபரை…

Read More

கோவை உள்ளூர் திட்ட குழும வெப்சைட் முடக்கிய ஹேக்கர்ஸ்…

கோவை மாவட்டத்தின் உள்ளூர் திட்ட குழும வெப்சைட்டான www.coimbatorelpaஎன்ற வெப்சைட் சமீபத்தில் ஹேக்கர்ஸ் மூலமாக முடக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. இந்தோனேசியா மொழியில் சில தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஹேக்கர்கள் இதை எதற்காக செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை . இந்த வெப்சைட்டில் உள்ளூர் திட்ட குழுமம் தொடர்பான அப்ரூவல் மற்றும் மாஸ்டர் பிளான் விபரங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாகவே பொது மக்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுஅதன் மூலமாக அனுமதி…

Read More