பாரதியார் பல்கலையில் பிஎச்டி விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு…
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முழு நேரம், பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வரும் 9ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது….
