K. V

அடிச்சு கொன்னுட்டாங்க… விபத்து வழக்கு கொலையாகிறது..!8

கோவை கணபதி கணேஷ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25), சரக்கு ஆட்டோ டிரைவர் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி ஜீவா பைக்கில் சென்ற போது தவறி விழுந்து காயமடைந்து விட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பைக்கில் சென்ற போது தவறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த நிலையில்…

Read More

கோவை வந்தார் நடிகர் விஜய்..!

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயை காண ரசிகர்கள் சிலர் திரண்டனர். அவரை நோக்கி தளபதி தளபதி என கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரிகார்ட் வைத்து ரசிகர்கள் விஜய் இருக்கும் இடம் நோக்கி வராமல் தடுத்தனர். விஜய் அவர்களை நோக்கி கையை…

Read More

9 lakh workers covered under PF scheme in Coimbatore region

Nearly nine lakh workers employed across 7,987 establishments in the Coimbatore–Nilgiris region are currently covered under the Provident Fund (PF) scheme, Regional PF Commissioner-1 k.Prashant said on Tuesday. Addressing the media, the official from the Employees’ Provident Fund Organisation (EPFO) said a employees enrollment campaign (EEC) is being conducted in Coimbatore to bring eligible workers…

Read More

Coimbatore highways engineer honoured at Bridge conference..

Coimbatore, December 17:A Divisional Engineer of the Special Projects Division of the Highways Department, Coimbatore, was honoured with a commemorative shield at the national conference “Bridge 2025 – Bridge Engineering in Viksit Bharat @ 2047”, held in Chennai. The conference was organised by the Indian Institution of Bridge Engineers in association with the Indian Institute…

Read More

நடிகை நிவேதா பெத்துராஜூக்கு மிரட்டல்..!

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக…

Read More

வந்தார் எம்ஜிஆர்…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளைத் தொப்பி சால்வையுடன் எம்ஜிஆர் நேற்று வந்திருந்தார். அவரைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நீங்களா எப்போது வந்தீர்கள் என விசாரித்தனர். ஏதோ சினிமா படமா எம்ஜிஆர் கெட்டப் போட்டு நடிக்கிறார்களா என அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது எம்ஜிஆர் தோற்றத்தில் வந்தவர் பெயர் அமர்நாத் என்பது தெரியவந்தது. தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான அவர் எப்போதும் எம்ஜிஆர் தோற்றத்தில் பொது இடங்களுக்கு வந்து செல்வதை வழக்கமாம். இவர் சினிமா படங்களில்…

Read More

கோவைக்கு கலைஞர் ஏர்போர்ட்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் , “முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி , 1969 முதல் 2011 வரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக நீண்ட காலம் பணியாற்றினார். 1957 ல் முதல் வெற்றிக்குப் பிறகு 13 முறை வெற்றி பெற்றுள்ள கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒருபோதும் தோல்வியடையாத சாதனையைப் படைத்துள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் தமிழ் திரைப்படத் துறையில் ஒரு திரைக்கதை எழுத்தாளராகப்…

Read More

form-6 ரெடி.. புதிய வாக்காளர்கள் சேர்க்க தீவிரம்…

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நேற்றுடன் முடிவு பெற்றது. வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதில் இணைக்கப்பட்ட வாக்காளர்கள் புதிய பட்டியலில் இடம் பிடித்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியும். வரும் 19ஆம் தேதிக்கு பிறகு புதிய வாக்காளர்கள் அதாவது 18 வயது நிரம்பிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர் சேர்ப்பு படிவம் form…

Read More

காலை மிதித்த தொழிலாளியை கழுத்தில் குத்தி கொன்ற கும்பல்..

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (23). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலருடன் மலுமிச்சம்பட்டி கணபதி நகரில் தங்கி சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று அனைவரும் அறையில் அமர்ந்து மது அருந்தினர் . அப்போது போதையில் இருந்த ஒருவர் தவறுதலாக ராகேஷ்குமாரின் காலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ்குமாரின் நண்பர்கள் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ராகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினர்…

Read More

பஸ்ஸில் இரும்பு ராடை சொருகிட்டாங்களே..

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இரும்பு ராடு ஏற்றிய டெம்போ சென்றது. பின்னால் தனியார் டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. டெம்போ டிரைவர் திடீரென விறை பிடித்த நிலையில் பஸ் வேகமாக வந்து மோதியது. இதில் பஸ்சில் இரும்பு ராடு புகுந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More