K. V

கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: 1.15 கோடி ரூபாய் பறித்த கும்பல்..!

கோவை நகர் பகுதியை சேர்ந்த 69 வயதான சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூதாட்டில் தனது வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்தது. அதில் மூதாட்டி பேசியபோது எதிர் முனையில் பேசிய நபர் மத்திய போலீஸ் சீருடையில் இருந்தார். அப்போது அவர் மும்பையில் இருந்து பேசுவதாகவும் விமானத்துறை மோசடி தொடர்பான வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. நாங்கள் முதல் கட்ட விசாரணையை நடத்தி…

Read More

கோவை கோனியம்மன் தேர்: பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

கோவையின் காவல் தெய்வம் என்ற பெருமை பெற்ற கோனியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடந்தது. ராஜ வீதி தேர்நிலை திடலில் இருந்து அம்மன் திருத்தேரில் வீதி உலா நடந்தது. ராஜவீதி , ஒப்பண்ணக்கார வீதி, பெரிய கடை வீதி வழியாக தேர் கோயிலை வந்தடைந்து மீண்டும் தேர் நிலை திடல் சென்றடைந்தது. இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோனியம்மன் கோயிலில் சுவாமியை தரிசிக்க கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்தது. பக்தர்களுக்கு அன்னதானம்…

Read More

கோவையில் 2353 கிலோ குட்கா அழிப்பு

கோவை கருமத்தம்பட்டி போலீஸ் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தீ வைத்து இன்று அழித்தனர். 2353 கிலோ எடையிலான இந்த போதை பொருட்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாதம் செட்டிபாளையம் பகுதியில் 2000 கிலோவுக்கும் அதிகமாக…

Read More

எப்போ தரப்போறாங்க… கோவையில் காத்திருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மொபட்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 150 மொபட் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டது. ஒரு மொபெட் 1.08 லட்ச ரூபாய் மதிப்பிலானது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் ஓடடும் வகையில் பக்கவாட்டில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ” முதல்வர்…

Read More

கோவை அறிவு சார் நூலகத்தில் படித்த1.04 லட்சம் பேர்..!

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 05.01.2024 ம் தேதி அன்று கோயம்புத்தூர் உப்பிலிபாளையம், ஆடிஸ் தெருவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. மேலும், இந்த நூலகம் மற்றும் TNPSC, TNUSRB, TRB, TN-TET, SSC, GATE, UGC/NET/SET, UPSC, BANK, NDA, CAT, NEET, JEE, CLAT, RRB, IELTS, NCERT தேர்வுகளுக்கு பங்கேற்கும் வகையில் சுமார் 2080 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், இந்த நூலகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல்…

Read More

கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் மறியல்: 500 பேர் கைது

தமிழக அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கோவை கலெக்டர் அலுவலக வளாகத்ததின் முன்புவருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை…

Read More

கோவையில் கல் குவாரி டெண்டரில் முறைகேடு: எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணனிடம் புகார் மனு அளித்த அதிமுகவினர்.. பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி அதிமுக நிர்வாகி கிருஷ்ணகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்று வழங்கினர். அதில் கோவை மாவட்டம் கேரளா எல்லையில் இரண்டு கல் குவாரி களுக்கு ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட்டது. ஆனால் இதில் அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக அவரது ஆதரவு நபருக்கு மட்டும் டெண்டர் வழங்க…

Read More

கோவை குடிநீர் திட்டங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடா…!?

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், குறிச்சி குனியமுத்தூர், ஆழியாறு, வடவள்ளி பேரூர் கூட்டு குடிநீர் திட்டம், பவானி உட்பட 25 ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த குடிநீர் திட்டங்கள் மூலமாக இரு மாவட்டத்தில் சுமார் 65 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். தினமும் சுமார் 50 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மொத்த குடிநீர் திட்டங்களை இயக்கி பராமரிக்கும் பொறுப்பு அவிநாசியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்வசம்…

Read More

85 வயசுக்கு மேல் வீட்டில் இருந்தே ஓட்டு: கோவையில் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் தொடர்பாக கோவை, திருப்பூர் நீலகிரி, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஆர்ஓ , ஏஆர்ஓ மற்றும் தேர்தல் பணி அலுவலர்களுக்கு மாஸ்டர் டிரைனர் மூலமாக பயிற்சி தரப்பட்டது. இதில் சட்டமன்ற தேர்தல் கடந்த காலங்களை போல் அல்லாமல் மிக நுட்பமாக இருக்கும்….

Read More

கோவை பெரியார் நூலகத்திற்கு ரூ 40 கோடியில் 1.25 லட்சம் புத்தகங்கள்..!

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 300 கோடி ரூபாய் செலவில் 7 தளங்களில் சுமார் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் பெரியார் நூலகம் கட்டுமான பணி பிரமாண்டமாக நடக்கிறது. இந்த பணி விரைவில் நிறைவு பெறும் நிலைமையில் இருக்கிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த நூலகத்தில் ஆய்வு செய்து பணிகளை வேகமாக முடிக்க உத்தரவு வழங்கினார். இந்த நூலகத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 1.25 லட்சம் புத்தகங்கள் வைக்க…

Read More