K. V

கோவையில் சாதனையாளர்கள் அறிவிப்பு பலகைகள் சாய்ந்தது

கோவை ஆர்எஸ் புரம் டி பி ரோடு பகுதியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை சீரமைப்பு பணிகள் செய்தது.கோவை நகர் பகுதியில் குறிப்பாக ஆர் எஸ் புரம் பகுதியின் வளர்ச்சிக்காக செயல்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கோவையின் பல்வேறு சேவைகளை செய்த சாதனையாளர்கள் தொடர்பான போட்டோக்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான தகர அறிவிப்பு பலகைகள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழுந்து கிடக்கிறது.இவற்றை…

Read More

கோவையில் சைகையில் கொலை மிரட்டல்: இரண்டு பேருக்கு ஜாமீன் ரத்து

கோவை மகிளா கோர்ட்டில் கிணத்துக்கடவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மாரி செல்வம் (36), அவரது அண்ணன் ராம்குமார் (48) ஆகியோர் குற்றவாளிகளாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் சாட்சிகளாக ஆஜரான புகார்தாரரான அரசம்பாளையம் ஸ்ரீதேவி மற்றும் கண்ணால் பார்த்த சாட்சி கவுசிக் ஆகியோரை நீதிமன்றத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் கொலை மிரட்டல்…

Read More

நேரு ஸ்டேடியம் வ உசி பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை

கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் பகுதியில் சிலர் வாகனங்களை நிறுத்துவதாகவும். சிலர் வாகனத்தை பாதையில் வைத்து போட்டோ, வீடியோ எடுப்பதாலும் வாக்கிங் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிலர் வியாபார கடைகளை பொது இடம், ரோடு, வாக்கிங் பாதையில் வைத்துள்ளனர். இதனால் வாக்கிங் செல்வோருக்கு இடையூறு இருப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு போலீசார், மாநகராட்சி நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். இடையூறாக இருந்த சில கடைகள், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது….

Read More

கோவையில் குப்பையாக குவிந்து கிடக்குது வீல் சேர்கள்…

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடோனில் மாற்று திறனாளிகளுக்கான வீல் சேர்கள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை தூக்கி வீசி குப்பை போல் குவித்திருப்பதாக தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மாற்று திறனாளிகள் கையால் தள்ளியபடி செல்லும் வகையான வீல்கள் கொண்ட சேர் வழங்க கோரிக்கை மனு வழங்கி வந்தனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீல் சேர் கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால் ஒதுக்கீடு படி உரியவர்களுக்கு வழங்காமல் 200க்கும் மேற்பட்ட வீல் சேர்களை குப்பை போல்…

Read More

கோவையில் துணிப்பை மிஷின்கள் மாயம்

கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் தடை செயப்பட்ட பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறையவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் வந்தது. இந்த நிலையில் மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் தனியார் நிறுவனம் மூலமாக மஞ்சள் பை வழங்கும் மெசின்களை வைத்தும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டனர். மக்கள்…

Read More

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை காலம் நீட்டிப்பு…

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு கடந்த மே 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது, மேலும், முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. தற்போது, வரை இளநிலை படிப்புகளில் 73.37 சதவீதம் மற்றும் முதுநிலையில் 47.25 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இந்நிலையில், அரசு கல்லூரிகளில் இளநிலையில் 31,678 பேரும், முதுநிலையில் 12,759 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை…

Read More

உணவு நிறுவனங்களின் தரம் தொடர்பாக ஆய்வு

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை 3 மாதங்களுக்கு உணவகங்கள் மற்றும் அனைத்து உணவு விற்பனை நிறுவனங்களிலும் சிறப்பு ஆய்வு நடத்த மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் உணவு சேவை நிறுவனங்களில் இன்று முதல் தங்களின் ஆய்வு பணியை துவங்கினர். இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள்….

Read More

கோவையில் 5 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகம் முழுவதும் உள்ள 52 கோயில்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பேரூர் பட்டீசுவரர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோயில் நுழைவு வாயில் பகுதியில் வைக்கும் வகையில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதியுடன்கூடிய அறை ஏற்படுத்தப்பட்டு…

Read More

டெங்கு கொசுக்களை அழிக்க 10 ஆயிரம் கம்பூசியா மீன்கள்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20 வார்டுகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில் கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளை கண்டறிந்து இன்று ஒரே நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணிகளை செய்தனர். ஒவ்வொரு நாளும்…

Read More

கோவையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு…!

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொழில் பூங்கா வளாகம் உள்ளது. அங்கு ஐ.டி., சாப்ட்வேர் என 6 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மும்பையை தலைமையிடமாக கொண்ட சாப்ட்வேர் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில், இன்று காலை 9…

Read More