K. V

கோவையில் drink and driving சோதனை தீவிரம்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனங்கள் ஒட்டுவோர் மற்றும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை 7 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது, சந்தேக நபர்களை கண்டறிதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன் தங்கதுரை மகேஸ்வரன் தலைமையில் கடந்த ஆக., 24ம்தேதி (திங்கள்) காலை 5…

Read More

கோவையில் 434 பேருக்கு பிடி வாரண்ட்…

கோவை மாநகரில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக உள்ள 434 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாட்களில் 26 பேரை கைது செய்துள்ளனர். கோவை மாநகர போலீசார் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கமிஷனர் கண்ணன், தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டது…

Read More

கோவையில் பதுக்கிய 205 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

கோவை சரவணம்பட்டி 4வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு சட்டவிரோதமாக குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு யாரும் இல்லாததால் போலீசார் வீட்டில் இருந்த 1,530 பாக்கெட்டுகள் கொண்ட 205 கிலோ குட்கா மற்றும் ரூ.79,300ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில், பார்த்திபன் என்பவர் அந்த வீட்டில் வசித்து…

Read More

கோவை மாநகரில் போலீஸ் ஐஸ் திட்டம்…!

கோவை மாநகரில் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் போலீஸ் ஐஸ் என்னும் குற்றத்தடுப்பு வலையமைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இத்திட்டம் தனியார் காவலாளிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும் நேரடியாக கண்காணிப்பில் இருக்க இயலாத நிலையில், தனியார் காவலாளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், நகை கடைகள், தொழிற்சாலைகள், குடோன்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், மனைகள், கல்வி நிறுவனங்கள், கட்டுமான பணி நடக்கும் பகுதிகள்…

Read More

தேசிய கூடை பந்து போட்டி: தென்மேற்கு ரயில்வே அணி சாம்பியன்…

கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60ம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து, முதலாம் ஆண்டு மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் 5 நாட்கள் நடந்தது. ஆண்கள் பிரிவில் 4 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடந்தது. செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, வஹப்ளி தென்மேற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் தென்மேற்கு ரயில்வே அணி 65 54 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது….

Read More

2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவார்களா…?!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தவெக அரசு மகளிருக்கு உரிமை தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பிரதானமாக அறிவித்தது. மகளிர் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு உரிமை தொகையாக 2500 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாரந்தோறும் உரிமை தொகை கேட்டு 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் விண்ணப்ப மனு கொடுத்து வருகின்றனர்….

Read More

கோவையில் டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறை…

கோவை மண்டலத்தில் 250 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) ஒதுக்கீடு செய்யப்படாததால், புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அவற்றின் கீழ் செயல்படும் பிரிவு அலுவலகங்கள் மூலம் புதிய தொழிற்சாலைகள், குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்காக பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதற்கான மின் கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட வாரிய…

Read More

கோவையில் 2206 அரசு பஸ்களில் ரூட் போர்டு…

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 2,206 அரசு பஸ்களில் ரூட் போர்டு என்ற வழித்த பெயர் பலகை பொருத்தப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் முகமதுநாசர் உத்தரவின்படி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் அரசு பஸ்களின் வழித்தட பெயர் பலகைகளின் குறைபாடுகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்கள் பணிமனையில் இருந்து இயக்கத்துக்கு…

Read More

கோவையில் நீட் தேர்வு: 4167 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் நீட் முதுநிலை தேர்வு மையத்தில் மாணவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் நீட் முதுநிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில் பீளமேடு, சரவணம்பட்டி, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மொத்தம் 18 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத மாணவர்கள் காலை முதலே தேர்வு…

Read More

2.50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்; பைனான்சியர்கள் மீது புகார்

கோவை சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் செங்கதிர் பிரகாஷ் (46) தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக குறிச்சி பகுதியில் திருமண மண்டபம், பேக்கரி உள்ளிட்ட வணிக வளாகங்கள் அடங்கிய சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது தொழில் தேவை மற்றும் வங்கி கடன் பெறுவதற்காக, தனது நண்பரான உடையாம்பாளையத்தைச் சேர்ந்த தியாகு (47) என்பவரது பெயருக்கு மேற்படி சொத்தை கடந்த 2003-ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து சாய்பாபா காலனியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.5 கோடி கடன்…

Read More