கோவை மாவட்டத்தில் அதிக ஆழமான குவாரிகள் மூட திட்டம்

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது.

இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க வேண்டும். அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரியபசுமை வரி செலுத்தப்பட் தா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக

கண்டறியப்பட்டு வருகிறதா, கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் இருக்கிறதா, கிரசர்கள் முறையாக இயங்கி வருகிறதா என கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே கிரசர்கள் செயல்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதி இல்லாத கிரசர்கள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட ஒரிரு நாளில் டிரோன் சர்வே நடத்தப்படும். கோவை மாவட்டத்தில் 139 குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தவேண்டியுள்ளது. ஏற்கனேவ 22 குவாரிகளில் டிஜிபிஎஸ் சர்வே செய்யப்பட்டது.

டிரோன் சர்வே மூலமாக குவாரிகளின் அத்துமீறல் முறைகேடு கண்டறியப்படும். அதிக ஆழமுள்ள ஆபத்தான வகையில் இயங்கும் குவாரிகள் விரைவில் மூடப்படும். அதிக கனிம பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அனைத்து குவாரிகளும் விதிமுறைகள் மீறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் ஜெயபால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *