K. V

என்ன ஹிந்தில பேசுறாரு.. புரியாமல் தவித்த பாஜக தொண்டர்கள் ‌. ‌..

கோவைபா.ஜனதா சிங்காநல்லூர் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் சிங்காநல்லூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பா.ஜனதாவில் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினர் கூட கட்சியின் தலைவராக முடியும். இங்கே பூத் கமிட்டி சக்தி கேந்திரா மண்டல் தலைவர் மாவட்ட தலைவர் மாநில…

Read More

தண்ணி வரலை.. ஓட்டு போட மாட்டோம்..

தேர்தல் புறக்கணிப்பு தமிழக அரசே! தங்கள் ஆட்சியின் கீழ் உள்ள கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பட்டணம் ஊராட்சி மக்கள் குடிதண்ணீர் இன்றி நா வரண்டு கிடக்கின்றோம். நாதியற்ற மக்களை காப்பாற்ற வாருங்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப தர மறுக்கும் குடிதண்ணீரை உடனே பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தாருங்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றியோடு இருப்போம். ஜனநாயகத்தின் முக்கியம் தேர்தல் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தலை விட…

Read More

26 டன் சோபா மெத்தை குப்பை..

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நூறு வார்டுகளில் ரோட்டோரம் மற்றும் பொது இடங்களில் சோபா மெத்தை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் குவிந்து கிடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று லாரி மூலமாக பயன்பாட்டின்றி கிடந்த பொருட்களை சேகரித்தனர். 5 மண்டலங்களிலும் 26. 22 டன் அளவிற்கு மெத்தை தலையணை சோபா சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

Read More

சர்வர் மக்கர் மக்களுக்கு டார்ச்சர்…

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 3000 ரூபாய் வேட்டி சேலை ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கும் பணி கடந்த எட்டாம் தேதி முதல் நடக்கிறது. இந்தப் பணியை முடக்கும் வகையில் ரேஷன் கடை ஸ்மார்ட் கருவிகள் சர்வர் தாமதம் ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நியாய விலை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் தனியார் நிறுவனம் சர்வரை சரியாக…

Read More

மாதிரி ஓட்டு பதிவு முடிஞ்சிருச்சு மெஷின்களுக்கு சீல் வைப்பு

கோவை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 19521 ஓட்டு மிஷின்கள் சரியாக இயங்கி வருகிறதா என சரி பார்க்கும் பணிகடந்த ஒரு மாதமாக நடந்தது. இந்த பணி நிறைவடைந்தது. 397 மிஷின்கள் பழுதான நிலையில் இருந்தது தெரிய வந்தது. இந்த மிஷின்கள் நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. மூன்று கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 200 மெஷின்களை வைத்து ஓட்டு பதிவு நடத்தினர். இதில் ஒவ்வொரு…

Read More

லங்கா கார்னரில் குழி தோண்டீட்டே இருக்காங்க..

கோவை ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பகுதியில் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. சாக்கடை நீர் பாய ஸ்கொயர் கான்கிரீட் குழாய் பதிக்கப்பட்டது. இந்த வழியே ஏகப்பட்ட கேபிள் நிறுவனங்களின் ஒயர்கள் குவிந்து கிடக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குழி தோண்டி கோவை மாநகராட்சி நிர்வாகம் வேலை செய்து வருகிறது. ஆனால் பணி இன்னும் முடியவில்லை. இதற்கிடையே ரயில்வே நிர்வாகம் லங்கா கார்னர் பாலத்திலிருந்து தண்ணீர் ஒழுகுவதை தடுக்கும்…

Read More

பிரியாணி , குவாட்டர் … விலை பட்டியல் விசாரிக்குது தேர்தல் கமிஷன்

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர் இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பொருட்கள் தொடர்பான பட்டியலை சேகரித்து அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருட்களின் விலையிலும் ஏற்ற தாழ்வு இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும், அதனை தேர்தல் கமிஷன் ஆய்வு அந்த விலை பட்டியலை தேர்தல் தேதி அறிவித்த…

Read More

தேமுதிகவுடன் கூட்டணி பேசவில்லை.. நைனார் நாகேந்திரன் பேட்டி

கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ,தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழிபாடு நடத்தினர். பின்னர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது.அப்பொழுது பல்வேறு கொடுமைகள் அனுபவிக்கப்பட்டது.மத மாற்றங்கள் செய்யப்பட்டது.இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை படையெடுப்பு நடந்தது. சோமநாதபுரம்…

Read More

கோவையில் காரில் தீப்பிடித்து உடல் கருகி வாலிபர் சாவு

கோவை குளத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் . 22 வயதான தனியார் நிறுவன இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காளியாபுரத்திலிருந்து திருமலையாம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரத்தில் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது இதற்காக குழாய்களை ரோட்டோரம் வைத்திருந்தனர். எதிர்பாரா விதமாக அந்த குழாய் மீது கார் மோதியது . இதில் கார் உடனடியாக தீப்பிடித்தது. காரில் இருந்த இரண்டு பேர் உடனடியாக இறங்கி விட்டனர்….

Read More

கோவை மாவட்டத்தில் 90 தேர்தல் கண்காணிப்பு படை..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணி தீவிரமடைந்து வருகிறது. மாவட்ட அளவில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 18000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்கண்காணிப்பு படைகள் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கிறது .‌ இதில் 90 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட…

Read More