K. V

கோவை சிறையில் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா சப்ளை…

கோவை மத்திய சிறையில் மகேஷ் (எ) மகேந்திரன் (26), முரளி (எ) சுரேந்திரன் (22) மற்றும் கலாநிதி (எ) அபிவிஷ்ணு (27) ஆகிய 3 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக, கோவை சின்ன தடாகத்தைச் சேர்ந்த நவீன் (27) என்பவர் நேற்று சிறைக்கு வந்துள்ளார். அவர், கைதிகள் 3 பேருக்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்தார். அதனை சிறை நுழைவாயிலில் இருந்த சிறை அதிகாரிகள் வாங்கி வைத்தனர். பின்னர், கைதிகளை சந்தித்துவிட்டு நவீன் புறப்பட்டு…

Read More

கோவையில் 32 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி…

பைல் படம்.. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ராஜு (62). இவர், தங்க நகை தொழில் செய்து வருகிறார். ராஜு தங்க நகைகளை கோவை கொண்டு வந்து விற்பனை செய்து செல்வது வழக்கம். அதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்க நகைகளை விற்பனை செய்ய தனது தொழில் கூட்டாளிகளான சந்தோஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 335 கிராம் தங்க நகைகளுடன் கோவை வந்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம், டிபி ரோட்டில் அவரை சந்திக்க…

Read More

எஸ்.பி வேலுமணிக்கு பதிலாக செ.ம வேலுச்சாமி… மாவட்ட செயலாளராக அறிவித்த எடப்பாடி

அதிமுகவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி வேலுமணி இருந்தார். இவரை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிரடியாக நீக்கி அவருக்கு பதிலாக முன்னாள் அதிமுக அமைச்சரும், அமைப்பு செயலாளராக இருந்த செ.ம வேலுச்சாமியை நியமித்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு வழங்கிய நிலையில் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்துள்ளார். அதே…

Read More

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் 5 நாட்கள் இரவு நேர வாகன தடை

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை (14ம் தேதி) முதல் வரும் 18ஆம் தேதி வரை பி எஸ் என் எல் ஆப்டிகல் பைபர் கேபிள் அமைக்கும் பணி நடக்க உள்ளது . இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது அவிநாசி ரோட்டில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் உள்ள…

Read More

கோவை உக்கடத்தில் வாலிபர்களை விரட்டி முட்டிய காங்கேயம் காளை…

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் இன்று நள்ளிரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும் பொருட்களை வீசினர். கோபமடைந்த காளை அவர்களை விரட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை மாடு முட்டி தூக்கி வீசியது. பின்னர் வேகமாக ரோட்டில் ஓடியது. இதை பார்த்து பயந்து போன அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கோவை மாநகர…

Read More

போதை ஏறி போச்சு…கோவை கலெக்டர் அலுவலகம் பெண் ரகளை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மாலை 50 வயது மதிக்கதக்க பெண் வந்திருந்தார். பேண்ட் டீ சர்ட் அணிந்து ஆண் போன்ற தோற்றத்தில் சுற்றிய அவர் திடீரென அங்கேயிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் அங்கே சென்ற போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் பீர் பாட்டில் வைத்திருந்தார். மதுவை சிறிது குடித்து விட்டு மீதம் வைத்திருந்தார். போலீசார் அவரிடம் யார்…

Read More

கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு…

தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்து 500மீட்டர் வரையுள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 851 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் அதிகளவில் மூடப்பட இருக்கிறது. காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள…

Read More

கோவையில் 4513 டன் உரம் இருப்பு…

இது குறித்து கோவை வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா உர வகை 3,176 மெட்ரிக் டன், டிஎபி உர வகை 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் உர வகை 2,933 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உர வகை 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உர வகை 4,513 மெட்ரிக் டன், தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது….

Read More

கோவையில் தென்மேற்கு பருவமழை பாதிப்பை தடுக்க ஆலோசனை…

கோவை கலெக்டர் பவன்குமார் தலைமையில் தென்மேற்கு பருவமழை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில், தென்மேற்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலூகா அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து 1077 என்ற கட்டணமில்லா…

Read More

கோவை ரயிலை கவிழ்க்க முயற்சி… ஏணி திருடர்கள் 2 பேர் கைது

திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அஹில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி கோவையை கடந்து சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில் ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தினால் ஆன ஏணி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் அந்த ரயில் ஏணி மீது ஏறியது. இதில், அந்த ஏணி துண்டு…

Read More