K. V

பனிப்புயலால் கோவை வெள்ளிங்கிரி மலை ஏற தடை…!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் வெள்ளிங்கிரி மலை அமைந்துள்ளது. 7 மலை ஏறி கிரி மலை தரிசனம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. வெள்ளிங்கிரி மலை மற்றும்…

Read More

கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் கர்ப்பம் அதிகரிப்பு குறித்து விசாரணை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், சிறார் கர்ப்பம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மகளிர் போலீசார், சைல்ட் லைன் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்திதல் ஏப்ரல் மாத டீன் ஏஜ் சிறார் கர்ப்பம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்ட அளவில் ஒன்றியம் வாரியமாக சிறார்…

Read More

கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத (drop out ) 3349 மாணவர்கள் குறித்து விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி வராத மாணவ மாணவிகள் (School drop out) தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கணக்கெடுப்பின் படி, மாவட்ட அளவில் 3349 மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் நின்று விட்டதாக அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதுவும் அரசு மற்றும் அரசு சார்பு பள்ளிகளில் படித்த இந்த மாணவ மாணவிகள்…

Read More

கோவையில் நினைவுகளை சுமக்கும் மரங்கள்…!

கோவை நேரு ஸ்டேடியம் அருகே கோவை மாநகராட்சி மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்கா முட்புதர் காடாக இருந்தது. அப்போது நேரு ஸ்டேடியம், வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம், பஸ் ஸ்டாண்ட் கிடையாது. பனை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இந்த பகுதிக்கு அந்த காலத்தில் ‘பனங்காட்டுபுதூர்’ என்ற பெயர் இருந்தது. இந்த காட்டில் சில நிழல் தரும் மரங்கள் இருந்தன. வழி போக்கர் சிலர் இங்கே தங்கி ஒய்வெடுத்தார்கள்,…

Read More

கோவையில் கொட்டியது மழை கட்டானது மின்சாரம்…

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்று இரவு காற்றுடன் மழை பெய்தது. தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆலாந்துறை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. வறட்சியால் தவித்து வந்த விவசாயிகள் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மலையை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சிறுவாணி அணை மற்றும்…

Read More

பாறை, பள்ளம்… ரூ.30 கோடி மைல்கல் மேம்பாலம் பணி தாமதம்…

கோவை மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது. 3 பேக்கேஜ்களாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 13 சிறுபாலங்களுடன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது, பைபாஸ் ரோட்டின் துவக்கமான மைல்கல் சுகுணாபுரம் மஞ்சு பள்ள ஓடை மீது புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. சுமார்…

Read More

கை ஏந்தாமல் சைகை காட்டி அசத்தும் காக்கி சட்டை…!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (50). திருநங்கையான இவர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஹோம் கார்டு என்ற ஊர்காவல் படை காவலராக பணி செய்து வருகிறார். வின்சென்ட் ரோடு, ராஜ வீதி பகுதியில் இவர் பணி செய்கிறார். இவர் கூறியதாவது: நான் தங்க நகை வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். என் 14 வயதில் ஏற்பட்ட உடல் மாற்றத்தினால் பிரேம் என்ற பெயருடன் இருந்த நான் திரு நங்கையாக மாறி விட்டேன். மும்பை சென்று சில காலம்…

Read More

பழங்கால பெண்களின் அழியாத ஆபரணம் ‘சுடுமண் காதணிகள்’…!

மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இள சுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது. ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத் திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்-கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுடவைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன், மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடி வங்களை சுடு மண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம்…

Read More

168 ஆண்டு பொக்கிஷம்… கோவையில் பஞ்சு குடோன் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆனது…!

கோவையில் பிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரம் 1850ம் ஆண்டில் உச்சத்தில் இருந்தது. அந்த கால கட்டத்தில், கோவையில் பிரமாண்ட அலுவலகங்களும், குடியிருப்புகளும் உருவானது. கோவையில் பஞ்சு உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிந்த பிரிட்டீசார், அதனை சேமித்து மில்களுக்கு அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக நகரின் மையப்பகுதியில் 4,500 சதுரடி பரப்பில் 50 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை கடந்த 1858ம் ஆண்டில் கட்டினர். கான்கிரீட் வசதி இல்லாத அந்த காலத்தில் தேக்கு மரத்தை வைத்து அதன் மீது கான்கிரீட்…

Read More

37 ஆயிரம் தட்கல் மின் இணைப்பு என்னாச்சு…விவசாயிகள் ஏமாற்றம்

கோவையில் தமிழக விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்ற) மாதாந்திர செயற்குழு கூட்டம் பேரூர் ஆறுமுக கவுண்டனூரில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் ரங்கநாதன், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையினருக்கு, 234 எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்னைகளை விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திருத்தவும் ரத்து செய்யவும் எம்எல்ஏக்கள்,…

Read More