pink petrol: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் கண்காணிப்பு…

கோவை நகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும்

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிங்க் பேட்ரோல் வாகனம் மூலமாக தினமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இங்கே தொடர்ந்து இரவு பகலாக கண்காணிப்பு பணி நடக்கிறது.

பெண்களுக்கு ஏதாவது இடையூறு இருக்கிறதா பெண்களை யாராவது பின் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்களா? போதை நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனபெண் போலீசார் கூர்ந்து கவனித்து கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் வந்து புகார் தருவார்கள் என காத்திருக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போதையில் அத்துமீறி நடக்கும் நபர்கள் குறித்து பெண்கள் சிலர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே மதுபான கடை இருப்பதால் போதை கும்பல் பஸ் ஸ்டாண்டிற்கு அதிகமாக வந்து சுற்றுவதாக தெரிகிறது.

மதுபோதையில் பஸ் ஸ்டாப் பகுதியில் சிலர் தூங்குவதாக தெரிகிறது. பஸ் ஸ்டாண்டில் அசுத்தம் செய்து அநாகரிகமாக நடப்பதாகவும் புகார் கிடைத்துள்ளது. இதுபோன்ற நபர்களை உடனடியாக போலீசார் வெளியேற்றி வருகின்றனர். பெண்களுக்கு ஏதாவது தொந்தரவு வந்தால் முன்கூட்டியே தடுக்க போலீசார் உஷாராக செயல்பட வேண்டுமென உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *