கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் ஓட்டு சாவடிகள்…15223 ஓட்டு மெஷின்கள் குவிப்பு …!

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெசின்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக, அதற்கென ஒதுக்கப்பட்ட ஸ்டராங்க் ரூம்களில் வைக்கப்பட்டிருந்தது . மேட்டுப்பாளையம் தொகுதிக்கு என்எல்பி பாலிடெக்னிக், சூலூர் தொகுதிக்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகம், கோவை தெற்கு தான் சட்டமன்ற தொகுதிக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,…

Read More

தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்தா…? பதில் தர கோவை கலெக்டர் மறுப்பு

கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக நடப்பதாக புகார் இருந்துள்ளது. திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அம்மன் அர்ஜூனன், சுயேட்சை வேட்பாளர் புகார் தொடர்பாக நேற்று கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது கலெக்டர், 30 கோடி ரூபாய் பணத்துடன் வாகனம் சென்றதா, வெளியூர் நபர்கள் தங்கியிருந்தார்களா, ஒட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. ஆனால்…

Read More

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க… சுயேச்சை வேட்பாளர் நடுரோட்டில் போராட்டம்…!

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோடு ரவுண்டானா முன்பு கோவை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் என்பவர் இன்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தனி ஆளாக அவர் ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டார். அப்போது அவர் கூறியதாவது:கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக செந்தில் பாலாஜி பணத்தை வாரி இறக்கிறார். ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறார். அவருக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டும் என மிரட்டுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது நான் பணம்…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு மெஷின்கள் அனுப்பி வைத்தனர்

கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் இந்த வாக்கு சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டு மிஷின்கள் சப்ளை செய்யும் படி இன்று துவங்கியது. மாவட்ட அளவில் 15223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த இயந்திரங்கள் இன்று காலை 11:00 மணி முதல் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் 330…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்கு சாவடிகள், ஆவணங்கள் தயார்…

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தி 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள்,சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மேட்டுப்பாளையம்; கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பதால் இரண்டு ஓட்டு பதிவு மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது….

Read More

கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு 5 ஆயிரம்… தேர்தலை ரத்து செய்ய சொல்லி புகார்…!

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தங்களுக்கு ஓட்டு போட சொல்லி வேட்பாளர்கள் சிலர் பணத்தை கொடுப்பதாக அதிகளவு புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பல இடங்களில் வெளிப்படையாக பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன்…

Read More

ஓட்டு போட சொல்லி பணம் பட்டுவாடா… கோவையில் 24 வழக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் ஓட்டு போட சொல்லி பணம் தருவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிக புகார்கள் வந்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2 நாளில் ஓட்டு போட சொல்லி கட்சியினர் கொடுக்க வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேர் மீது போலீசில் புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தவிர இன்று கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஓட்டு போட சொல்லி பணம்…

Read More

வெளியூர் காரர்கள் இருக்காங்களா… கோவையில் அதிரடி சோதனை

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ், சர்வீஸ் அபார்ட்மெண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். |திருமண மண்டபம், பார்ட்டி ஹால் மற்றும் பொது இடங்களில் கட்சியினர் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள்…

Read More

இன்று இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடை…! அப்புறம் 3 நாள் லீவு

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும். 3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read More

வீடு வீடாக பணம் பட்டுவாடா கோவை தேர்தலில் பணமழை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன் தினம் 58…

Read More