கோவை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பத்து தொகுதிகளுக்கு 15223 ஓட்டு பதிவு மிஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு ஓட்டு பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்படும். கோவை மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள் சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள் கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள் தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள்,…

Read More

ரோபோ உடன் ஓட்டு கேட்ட கோவை தவெக வேட்பாளர்…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தன்னுடன் ஐந்தடி உயரம் கொண்ட நடிகர் விஜய் போட்டோவுடன் கூடிய ரோபோ அழைத்து வந்திருந்தார். இந்த ரோபோ எந்திரன் சிட்டி ரோபோ போல் வேகமாக நடக்கிறது. வணக்கம் தெரிவித்தால் திரும்ப கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்கிறது. பாதையில் யார் துணையின்றி தனியாக நடந்து செல்கிறது. ஆனால்…

Read More

கோவையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது…

கோவை சொக்கம்புதூர் ஐயப்பனார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (65). பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அசோக் குமார் (35) மற்றும் சதீஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு ஈடுபடுவது வழக்கம். நேற்று அசோக் குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டனர் இதைப் பார்த்த பாலன் அவர்கள் இருவரையும் திட்டி…

Read More

டாஸ்மாக் கடைகள் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் மூடல்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும். 3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read More

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பிடித்தது…!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் குப்பை குவிக்கப்பட்டுள்ளது . இன்று நள்ளிரவு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது . புகையுடன் வேகமாக தீ பரவியது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் புகார் தரப்பட்டது இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவைப்புதூர்…

Read More

கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு ‘கலர் கோடிங்’

கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஒரே பள்ளி கூட வளாகத்தில் ஐந்து முதல் எட்டு வாக்குச்சாவடிகள் அமைந்திருப்பதாக தெரிகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட வேண்டும் என தெரியாமல் குழப்பம் அடையும் நிலைமை இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஒரே வளாகத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளை அடையாளம் காணும் முறையில் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. அந்தப் பகுதியில் வாக்குச்சாவடிகளுக்கான வரிசை எண் அமைத்து…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்களில் ‘கேண்டிடேட் செட்டிங்’ பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பேலட் பேப்பர் வந்து வந்துவிட்டது….

Read More

கோவையில் 80 லட்ச ரூபாய் மோசடி: இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை…!

ஈரோட்டை சேர்ந்தவர்ஸதர்மலிங்கம் (45). திருப்பூரை சேர்ந்தவர் கணேசன் (50). இவர்கள் இருவரும் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ் மற்றும் வெற்றி முருகன் சிட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கினர். இவர்களிடம் கோவையை சேர்ந்த முதலீட்டாளர்கள் உட்பட 130 பேரிடம் 80 .57 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகை: போக்குவரத்து மாற்றம்

கோவைக்கு வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவுள்ளனர். அன்றைய தினம் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரக்கில் மாற்றம் செய்யப்படும். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஆவணங்கள் பொருட்கள் குவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 3563 வாக்கு சாவடிகளில் வரும் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க உள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட வகையான தேர்தல் ஆவணங்கள் , ரகசிய பேப்பர் ,சீல், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து மூன்று லாரிகளில் 34 வகையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வந்து…

Read More