தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க லைசன்ஸ்… போலீஸ் அறிவிப்பு

கோவை மாநகரப் பகுதியில் வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் மனுதாரர்கள், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டி, அதில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி 3 கூடுதல் புகைப்படங்களையும் தனியாக இணைத்து மனுதாரர் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் உரிமைக் கட்டணமாக ரூ.1,200ஜ

கருவூல வங்கியில் செலுத்தியற்கான சலான் பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் இடத்தின் முகவரி, சாலையின் பெயர் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் முக்கிய அடையாளக் குறி, டிராயிங் எண் ஆகிய விவரங்களுடன் கூடிய வரைபடம் 6 நகல்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், அதற்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

இடங்களை நேரில் பார்வையிட்டு, விசாரணைக்குப் பின் காவல்துறையின் கண்ணோட்டத்தில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.சாலை ஓரக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்படாது. கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம் மற்றும் சினிமா தியேட்டர்களில் தற்காலிக 1 பட்டாசுக்கடை அமைக்க விதிகளில் கடையில்லை என்றாலும், வெடிபொருள் விதிகள் 2008, விதி 93 (3)-ன் படி அந்த வளாகம் 9 சதுர மீட்டருக்கு குறையாமலும் 25 சதுர மீட்டருக்கு மிகாமலும் சேமிப்புப் பகுதியாக இருக்க வேண்டும் என மாநகர போலீசார் தெரிவித்தனர்.

One thought on “தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க லைசன்ஸ்… போலீஸ் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *