தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க லைசன்ஸ்… போலீஸ் அறிவிப்பு
கோவை மாநகரப் பகுதியில் வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் மனுதாரர்கள், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற…
