ரெண்டு லாரிக்கு ஒரே நம்பர் பிளேட்…

கோவை மதுக்கரை அடுத்த நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் லாரி வைத்துள்ளார்.

இவரது லாரியின் பதிவு எண் நம்பர் பிளேட் உடன் உக்கடம் லாரி பேட்டையில் ஒரு லாரி நின்று உள்ளது. இதை கந்தசாமியின் நண்பர் ஆறுச்சாமி என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, உக்கடம் லாரி பேட்டைக்கு சென்று பார்த்த போது அவரது நம்பர் பிளேட் பதிவு எண்ணுடன் அந்த லாரி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

தனது வாகன பதிவு எண் மோசடியாக பதிவு செய்து இன்னொரு லாரி இயக்கப்படுகிறது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *