ஆத்தா ”கண்” பார்த்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மன் சாமிக்கு இன்று பூஜை நடந்தது. அப்போது அம்மன் கண் திறக்கப்பட்டதாக அங்கே இருந்த பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோயிலில் கூட்டம் குவிந்தது. அம்மன் சிலையில் கண் திறந்தது எப்படி என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் விசாரித்தனர். ஆத்தா கண் திறந்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Read More

கோவைக்கு வந்தாச்சு 11 சர்வேயர்கள்..

கோவை மாவட்டத்தில் நில அளவை பிரிவிற்கு தமிழக அரசு மூலமாக 11 சர்வேயர் மற்றும் 7 டிராஃப்ட் மேன் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைத் துறை உதவி இயக்குனர் சரவணன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட அளவில் பல்வேறு தாலுகாக்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர். புதிதாக பொறுப்பேற்ற சர்வேயர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

உப்பிலிபாளையம் மேம்பாலம் ரூ.16 கோடியில் பெருசாகுது

கோவை மில் ரோடு, புருக்பாண்ட் ரோடு, நஞ்சப்பாரோடு , கூட் செட் ரோடு சந்திக்கும் உப்பிலிபாளையம் மேம்பாலம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. புவியியல் தகவல் அடிப்படையில் இந்த மேம்பாலம் கட்டப்படவில்லை. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் குளம் போல் நீர் தேங்கி விடுகிறது. மேலும் இந்த மேம்பாலத்தில் இட நெருக்கடி இருக்கிறது. சமீப காலமாக பிரச்சினை அதிகமானதால் இதனை 16 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்து கட்ட தேசிய நெடுஞ்சாலை…

Read More

படையப்பா வேணாம்பா காசு கொடுப்பா..

கோவையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படையப்பா சினிமா படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இன்று சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் படத்தில் சவுண்டு எதுவும் கேட்காத ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அப்போதும் சவுண்ட் எபெக்ட் வேலை செய்யவில்லை. சினிமா தியேட்டர் நிர்வாகம் ஏதோ செய்து பார்த்தும் சவுண்ட் கேட்கவில்லை. இந்த நிலையில் மௌன ராகமாக படம் ஓட்டப்பட்டது. கொதிப்படைந்த ரசிகர்கள் படையப்பா வேண்டாம் பணத்தை குடுங்க என வாக்குவாதம் செய்தனர். ஆனால் தியேட்டர் நிர்வாகம் பணம் திரும்பி…

Read More

ரேஷன் கார்டு வேண்டுமா

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்துார் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன . அதன் தொடர்ச்சியாக டிசம்பர்-2025 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 13.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்…

Read More

உங்களுக்கு ரேஷன் அரிசி வேண்டாமா. .

கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில், தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாகதங்களின் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக்கொள்ளலாம். இந்த தகவலை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Read More

எஸ் ஐ ஆர் வேலை செய்ய மாட்டோம்..

பேரூர் பகுதியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எஸ் ஐ ஆர் என்கிற வாக்காளர் சுருக்கத் திருத்த பணிகளை செய்ய மாட்டோம் எனக்கூறி அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Read More

ஐடி பார்க் ஏரியாவில் யானைகள் ஜாலி வாக்..!

கோவை ஜீரணத்தம் ஐடி பார்க் அருகே உள்ள முட்புதர் காட்டில் மூன்று யானைகள் இன்று புகுந்தன. இந்த யானைகள் அந்தப் பகுதியில் உள்ள சாக்கடை குட்டையில் குளித்து நீராடி முள்காட்டுக்குள் ஜாலியாக வலம் வந்தன . பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த இந்த யானைகள் திரும்பவும் வனப்பகுதி செல்ல முடியாமல் ஊருக்குள் சுற்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயன்ற போது திடீரென காணாமல் போய்விட்டன. யானைகளை தேடி வனத்துறையினர்…

Read More

ஓட்டு சின்னம் எல்லாம் அழிக்கிறாங்க

கோவை மாவட்டத்தில் 19523 ஓட்டு மிஷின்கள் கட்டுப்பாட்டு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.‌ இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓட்டு மிஷின்களில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் சின்னங்கள் இதர தகவல் அனைத்தும் அழிக்கும் பணி இன்று துவங்கியுள்ளது. ரீ செட்டிங் என்ற பெயரில் மொத்த தகவல்களும் நீக்கம் செய்யப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தும் வகையில் இந்த ஓட்டு மிஷின்கள் தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 40 நாளில்…

Read More

செம்மொழி பூங்கா திறந்தாச்சு…

காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. 208 கோடி ரூபாய் செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் நீர் வனம் மூலிகை வனம் என 20 வனப் பூங்கா மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த செம்மொழிப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 15 ரூபாய் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பூங்காவை பார்வையிட்டு ரசிக்கலாம்.

Read More