நடிகை நிவேதா பெத்துராஜூக்கு மிரட்டல்..!

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக…

Read More

வந்தார் எம்ஜிஆர்…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளைத் தொப்பி சால்வையுடன் எம்ஜிஆர் நேற்று வந்திருந்தார். அவரைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நீங்களா எப்போது வந்தீர்கள் என விசாரித்தனர். ஏதோ சினிமா படமா எம்ஜிஆர் கெட்டப் போட்டு நடிக்கிறார்களா என அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது எம்ஜிஆர் தோற்றத்தில் வந்தவர் பெயர் அமர்நாத் என்பது தெரியவந்தது. தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான அவர் எப்போதும் எம்ஜிஆர் தோற்றத்தில் பொது இடங்களுக்கு வந்து செல்வதை வழக்கமாம். இவர் சினிமா படங்களில்…

Read More

form-6 ரெடி.. புதிய வாக்காளர்கள் சேர்க்க தீவிரம்…

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நேற்றுடன் முடிவு பெற்றது. வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதில் இணைக்கப்பட்ட வாக்காளர்கள் புதிய பட்டியலில் இடம் பிடித்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியும். வரும் 19ஆம் தேதிக்கு பிறகு புதிய வாக்காளர்கள் அதாவது 18 வயது நிரம்பிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர் சேர்ப்பு படிவம் form…

Read More

காலை மிதித்த தொழிலாளியை கழுத்தில் குத்தி கொன்ற கும்பல்..

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (23). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலருடன் மலுமிச்சம்பட்டி கணபதி நகரில் தங்கி சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று அனைவரும் அறையில் அமர்ந்து மது அருந்தினர் . அப்போது போதையில் இருந்த ஒருவர் தவறுதலாக ராகேஷ்குமாரின் காலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ்குமாரின் நண்பர்கள் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ராகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினர்…

Read More

பஸ்ஸில் இரும்பு ராடை சொருகிட்டாங்களே..

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இரும்பு ராடு ஏற்றிய டெம்போ சென்றது. பின்னால் தனியார் டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. டெம்போ டிரைவர் திடீரென விறை பிடித்த நிலையில் பஸ் வேகமாக வந்து மோதியது. இதில் பஸ்சில் இரும்பு ராடு புகுந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

சொத்து வாங்கிட்டு சோறு போடலையே..

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில்,” மணிகண்டன் என்பவர் இருகூர் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் . இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தொழில் ரீதியாக பொறாமை கொண்டு மாவட்ட நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தார் . இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு எந்த விதிமுறை…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ்க்கு 16வது முறையாக குண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 16வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஏற்கனவே 15 முறை இமெயில் மூலமாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

Read More

யானை வருது கம்பி வேலி போடுங்க…

தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் கோவை ஆறுமுக கவுண்டனூரில் இன்று நடந்தது. இதற்கு சங்கத் தலைவர் கந்தசாமி உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன. யானையில் வருகையை தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் வனத்துறை அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலமாக சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என…

Read More

தண்ணீர் வாய்க்காலில் தனியாக சுற்றிய யானை..!

கோவை நரசிபுரம் ஓடை பகுதியில் இன்று யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. தண்ணீர் குடித்த பின்னர் யானை காட்டுக்குள் செல்லாமல் அந்தப் பகுதியில் ஓடை சீரமைப்பு பணியில் இருந்த ஜேசிபி முன்பு நின்று பிளிறியது. அங்கே இருந்தவர்கள் யானையைப் பார்த்து தப்பித்து ஓடினர். யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்த காட்சியை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ பதிவு பல்வேறு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜீரணத்தம் அன்னூர்…

Read More

நல்லாகுமா நல்லாம்பாளையம் ரோடு…

நம்ம கோயம்புத்தூர்ல பாதாள சாக்கடை போட்ட பின்னாடி மூடுன ரோடு எல்லாம் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு. ‌ குறிப்பா தார்தளம் போடாததனால பள்ளமா மாறிடுச்சு. இதை சரி செய்யுங்க. லாரி போச்சுன்னா பள்ளத்துல இறங்குது. நல்லாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் கவனிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு மக்கள் பேசிக்கிறாங்க..

Read More