கோவையில் அம்மா உணவகங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு விற்பனை
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 இடங்ளில் அம்மா உணவகங்கள் உள்ளது.
இங்கு கடந்த 3 மாதங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அம்மா உணவகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 12 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அம்மா உணவகம் அமைந்துள்ளது.
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சிங்காநல்லூர், மசக்காளிபாளையம், பூ மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலைய வளாகம், சரவணம்பட்டி, மணியக்காரம்பாளையம், குனியமுத்தூர், கோவைப்புதூர், குறிச்சி, ராமநாதபுரம், திருமால் வீதி மற்றும் கோவை அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய 12 இடங்களில் செயல்படுகின்றன. இங்கு நடப்பாண்டில் (மே, ஜூன் மற்றும் ஜூலை) ஆகிய 3 மாதங்களில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற 11 லட்சத்து 39 ஆயிரத்து 253 எண்ணிக்கையிலான உணவு வகைகள் ரூ.87 லட்சத்து 30 ஆயிரத்து 970க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

The mobile app is a game changer. I can play anywhere without any lag or crashing. Highly recommend downloading bcgameapp for a better experience.