Coimbatore incident: நாய்க்கு பயந்து ஓடியவர் சாவு…
கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
விடுமுறை முடிந்து இன்று காலை நீதிமன்ற வளாகத்தை திறப்பதற்காக ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் உள்புறமாக சுமார் 30 வயது வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த வாலிபரின் உடலை பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் அந்த பகுதியில் இருந்த கண்கள் அனைத்து கேமரா காட்சி பதிவு அடிப்படையில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. மர்ம நபர்கள் யாராவது தாக்கி கொலை செய்து விட்டார்களா? என போலீசார் சந்தேகித்தனர்.
அப்போது கேமரா பதிவுகளை பார்த்தபோது அந்த வாலிபர் நாய் துரத்தியதால் வேகமாக தப்பி ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. நாய் கூட்டத்திலிருந்து தப்பிக்க அவர் உயரமான காம்பவுண்ட் சுவர் ஏறி கீழே குதித்த போது தவறி விழுந்து காயமடைந்து இறந்து விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
அவர் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என தெரிகிறது. அவர் கோவிலில் எங்கே வேலை செய்து வந்தார் அவரின் விபரங்கள் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
