கோவை மாநகர போலீசில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம்…

கோவை மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு வெளிப்படையான, நட்பான, விரைவான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய காவல் சேவையை வழங்கும் நோக்கில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம் 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது வருகின்ற 01.09.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, புகார் மனு பெறுதல் மற்றும் ஒப்புகை உடனடியாக வழங்கப்படும். புலனாகக்கூடிய குற்றத் தகவல்களுக்கு சட்டப்படி தாமதமின்றி FIR பதிவு செய்யப்படும். சாதாரண மனுவிற்கு விசாரணை அலுவலர் 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்படுவார்.

எளிய மனு விசாரணைக்கு 14 நாட்களும், விரிவான மனு விசாரணைக்கு 30 நாட்களும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் உதவி வழங்கப்படும். காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சைபர் நிதி மோசடி புகார்களுக்கு இயன்றவரை ஒரு மணி நேரத்திற்குள் முதல் பதில் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம், காவல் நிலையங்கள், சரக அலுவலகங்கள், காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்தந்த அதிகாரிகளால் நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மாதம் ஒருமுறை, குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் காவலாளிகள், தங்கும் விடுதிகள் மற்றும் Service Apartments ஆகியவற்றின் உரிமையாளர்கள்பொறுப்பாளர்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பங்குதாரர்களுடன் போக்குவரத்த காவல் அதிகாரிகளால் கூட்டங்கள் நடத்தப்படும்.

இக்கூட்டங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தேவையான இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இலவசமாக வழங்கப்படும் காவல் சேவைகளுக்கு எந்தவொரு காவல் அலுவலரும் பணம், பரிசு அல்லது வேறு எந்தப் பலனையும் கோரக்கூடாது. இத்தகைய புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சேவை உரிமை ஆவணம் அனைத்து காவல் நிலையங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

காவல் நிலைய அளவில் குறைகள் தீர்க்கப்படாவிட்டால், காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆணையர் காவல் துணை ஆணையர் காவல் ஆணையர் என்ற மேல்முறையீட்டு நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

காவல் சேவைகள் குறித்த அவர்களின் கருத்துகள் மற்றும் திருப்தி நிலையை அறியும் வகையில் QR Code, SMS, WhatsApp உள்ளிட்ட வழிகளில் Feedback பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சேவைத் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

One thought on “கோவை மாநகர போலீசில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *