கோவை ஜி.ஹெச் முன் பிச்சைக்காரர்களை தாக்கும் கடைக்காரர்கள்…
கோவை அரசு மருத்துவமனை முன்பு வியாபார கடைகள் இருக்கிறது இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் சிலர் யாசகம் கேட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நடக்க முடியாதவர்கள் வயதானவர்கள் இங்கே யாசகம் கேட்கிறார்கள். சிலர் உடல் மற்றும் மன குறைபாடுகளுடன் பிச்சை கேட்பதாக தெரிகிறது. அவர்களை கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் விரட்டி தாக்குவதும் அவ்வப்போது நடக்கிறது.
சமீபத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த வாசுதேவன் (62 ) என்பவர் கால் நடக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கட்டு போட்டு பிளாட்பாரத்தில் தங்கி இருந்தார். அங்கே வரும் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வந்தார். இதை பார்த்த கடைக்காரர் ஒருவர் அவரை கடைப்பகுதிக்கு வர வேண்டாம் என சொல்லி அட்டைப்பெட்டியை வைத்து தடுத்து அவரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார்.
தண்ணீர் எடுத்து ஊற்றி டார்ச்சர் செய்தார் இது தொடர்பான வீடியோ பதிவு வைரலான நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடல் குறைபாடுடன் யாசகம் கேட்கிறார்கள். அவர்களை தாக்குவது சரியல்ல . மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் . கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இது பல் இதுபோல் அப்பாவிகளை தாக்குவது சரியல்ல தாக்குதல் நடத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். யாசகம் கேட்பவர்களை தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I’ve tried a few platforms lately, but this one feels the most stable. Great games and a very friendly vibe over at vn123winvn.