crime prevention: கோவை பிளாட்பார்மில் வாட்டர் ஸ்பிரே…

கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது.

அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி. பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி தாக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில் வழிப்போக்கர்கள் தங்குவது மற்றும் தூங்குவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விரட்டினாலும் சிலர் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கி விடுகிறார்கள்.

இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக நள்ளிரவு நேரங்களில் பிளாட்பாரம் பகுதிகளில் வாட்டர் ஸ்ப்ரே செய்து வருகின்றனர். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் பகுதி பிளாட்பாரங்கள், கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியினர் தண்ணீர் வாகனங்கள் மூலமாக வாட்டர் ஸ்பிரே செய்கிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “சிலர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து பிளாட்பாரங்களில் படுத்து தூங்குகிறார்கள். உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு பிரச்சனை காரணமாக அவர்கள் சிலர் இறந்து விடுகிறார்கள். வழிப்போக்கர்கள் சிலர் பிளாட்பாரங்களில் தூங்கும் நபர்களை பணம், செல்போனுக்கு ஆசைப்பட்டு கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்துகிறார்கள்.

இது போன்ற பிரச்னைகளை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணி நடக்கிறது. மேலும் பிளாட்பாரங்களில் வழிப்போக்கர்கள் தூங்குவதை தடுக்கும் வகையில் வகையிலும் பிளாட்பாரம், பஸ் ஸ்டாப் பகுதியை சுத்தம் செய்யும் வகையிலும் வாட்டர் ஸ்பிரே செய்யப்படுகிறது ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *