road traffic: கோவை நகரில் முறைப்படுத்தாத பார்க்கிங்
கோவை நகரில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரதான ரோடுகளை தவிர்த்து நகரின் பல்வேறு பகுதிக்கு சென்று வரும் இணைப்பு ரோடுகள், மாநகராட்சி வார்டிற்குள் செல்லும் ரோடுகளை சீரமைக்க, தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு பணி நடக்கிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் நடத்தப்படும். நகரில் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. ரோட்டில் ஒர்க் ஷாப், கடைகள், வியாபார கடைகள், கட்டடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலையிருக்கிறது. 50 சதவீத்திற்கும் அதிகமாக பல இடங்களில் ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் ஏரியாவை வணிக வளாகங்கள் முடக்கி விட்டதால், பொதுமக்கள் ரோட்டை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். பார்க்கிங் பகுதிகளை முறையாக கண்டறிந்து அவற்றை வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்யப்படவுள்ளது. குறிப்பிட்ட சில நாட்கள் ரோட்டோர பார்க்கிங் பகுதிகள் மாற்றப்பட்டு வருகிறது.
இதனால், வாகன நெரிசல் குறைந்துள்ளதா? என ஆய்வு செய்து மாற்று திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.
நகரில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்கள் ரோட்டோரங்களில் நிறுத்தப்படுகிறது. இதில், போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் வாகனங்கள் நிறுத்த ஏதுவான சூழலை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
