திருடனாக மாறிய ஐடி டீம் லீடர்
கோவையில் ஐடி நிறுவனத்தில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப்களை திருடிய டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ராமநாதபுரம், சுங்கம் பகுதியில் தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் சுழற்சி முறையில் சுமார் 40 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக அபிஷேக் (31) என்பவர் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25ம் தேதி அபிஷேக் நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் இருப்பு…
