கோவையில் வீட்டிலேயே நாட்டு வெடி குண்டு தயாரித்த கில்லாடி கைது…!
கோவை சூலூர் பள்ளபாளையம் பஞ்சாயத்து ஆபீஸ் வீதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). இவர் கோயில் விழாக்களில் வெடி வைக்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக பல்வேறு பகுதிகளில் நாட்டு வெடிகளை வாங்கி விழா காலங்களில் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இவர் சொந்தமாகவே நாட்டு வெடி ரகங்களை தயாரித்து பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணக்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு இருந்தது…
