கோவையில் வீட்டிலேயே நாட்டு வெடி குண்டு தயாரித்த கில்லாடி கைது…!

கோவை சூலூர் பள்ளபாளையம் பஞ்சாயத்து ஆபீஸ் வீதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). இவர் கோயில் விழாக்களில் வெடி வைக்கும் தொழில் செய்து வந்தார்.

இதற்காக பல்வேறு பகுதிகளில் நாட்டு வெடிகளை வாங்கி விழா காலங்களில் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இவர் சொந்தமாகவே நாட்டு வெடி ரகங்களை தயாரித்து பயன்படுத்துவதாக புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணக்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவர் வீட்டில் இருந்த 25க்கும் மேற்பட்ட நாடு வெடிகுண்டுகள், பெரிய பாறை வெடிகள் ராக்கெட் வெடி உள்பட பல்வேறு வகையான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவரை போலீசார் கைது செய்தனர்.

சுமார் 200 கிலோ எடையிலான வெடி மருந்துகளும் வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. குறிப்பாக ஜெலட்டின், குவாரிகளில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் வெடி பொருட்கள் இருந்தது. இவரிடம் வெடி மருந்துகள் எங்கே இருந்து வாங்கப்பட்டது .இதற்கு வேறு யாராவது துணையாக இருந்தார்களா நாட்டு வெடிகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை யார் சொல்லிக் கொடுத்தது

எப்படி தயார் செய்தீர்கள் எத்தனை ஆண்டுகளாக இப்படி வீட்டிலேயே வெடிகுண்டு தயார் செய்கிறீர்கள் என போலீசார் விசாரித்து விடுகின்றனர் . இவர் கோயில் விழாக்களுக்காக மட்டும் வெடி பொருட்கள் பட்டாசுகள் தயார் செய்தாரா இல்லை வேறு ஏதாவது அசம்பாவித சம்பவங்களில்

ஈடுபடுவதற்காக நாட்டு வெடிகளை தயார் செய்தாரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சம்பத்து எந்த வருடம் சில காலம் சரவணகுமார் வேலை செய்தது தெரிய வந்தது. அங்கே வெடிமருந்து பட்டாசை தயாரிப்பதை அவர் கற்றுக் கொண்டு வந்து கோவையில் சொந்தமாக தயாரித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *