3 நாள் லீவு: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
காந்தி ஜெயந்தியை தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருவதால் கோவை மாவட்டத்திலிருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், நாகர்கோயில் மற்றும் கேரள மாநிலங்களுக்கு அதிக அளவு மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் கோவை காந்திபுரம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. ஆம்னி பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோவை மார்க்கமாக…
