ஜனநாயகன் படம் வெளியானதுக்கு எங்களுக்கு சம்பந்தமில்லை…அண்ணாமலை பேட்டி

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்க வழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைக்கிறார்கள்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சரியாக நடக்க வேண்டும். மக்கள் நன்றாக கவனித்து பார்க்கிறார்கள். திருமாவளவன் பொறுமையாக இருப்பவர். விஜய் இப்போது தான் வந்திருக்கிறார். எனவே தலைவர்களாக இருப்பவர்களுக்கு சகிப்பு தன்மை அவசியம் வேண்டும்.

ஜனநாயகம் திரைப்படம் வெப்சைட்டில் வெளியானது எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது. அது போஸ்ட் புரடக்சன் ஸ்டூடியோ, அவர்கள் எல்லாம் அதற்கு உத்தரவாதம் தரவேண்டும். வந்தது 3, 4 நிமிட பட வீடியோ. சிலர் முழு படமும் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

நான் தேர்தலுக்கு பின் எப்போது ரிலீஸ் செய்தாலும் ஜனநாயகன் படத்தை சினிமா தியேட்டர் சென்று பார்ப்பேன்.

தவெக ஆதவ் அர்ஜூனா தேவையின்றி ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பெயரை எல்லாமல் இழுக்கிறார். பொதுமக்கள் யாரும் இந்த மாதிரி ஜனநாயகன் படத்தை பார்க்காதீங்க. யாராவது அனுப்பினால் பார்க்காம விட்டுருங்க.

இது பல பேரின் உழைப்பு. சினிமா கம்பெனியின் முதலீடு. இதை நாங்கள் கண்டிக்கின்றோம். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் பொழுது ஒரு ரசிகனாக நான் சென்று அந்தப் படத்தை தியேட்டரில் பார்ப்பேன்.

அரசியல் லாபத்திற்காக பாஜகவை இழுக்காதீங்க, பாஜக இந்தியாவில் எத்தனை இடத்தில் அரசியல் செய்கிறது. ஏதாவது சினிமா படத்தை நாம பண்றமா,அதுக்கும் எங்களுக்கும் என்ன கன்ட்ரோல் இருக்குது.

தேவையின்றி ஆதவ் அர்ஜூனா மற்றும் அந்த கட்சியினர் சோசியல் மீடியாக்களில் சொல்லும் கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளையும் கடந்து வெல்லப் போகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டுமென்று மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

செந்தில் பாலாஜி 18 சுயேச்சை வேட்பாளர்களை தனது தொகுதியில் இறக்கி விட்டிருக்கிறார். அவர்கள் தங்களுக்கு ஓட்டு கேட்காமல் திமுகவுக்கு ஓட்டு கேட்கிறார்கள். எந்திரன் படத்தில் சிட்டி ரோபோக்கள் போல இவர்கள் வேலை செய்கிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் இந்த ரோபோட்டுகளின் பேட்டரி கட்டப்படும். செந்தில் பாலாஜி கண்டிஷனில் தான் வெளியே வந்திருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் உள்ளே போகலாம்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *