3 நாள் லீவு: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

காந்தி ஜெயந்தியை தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருவதால் கோவை மாவட்டத்திலிருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக கோவையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், நாகர்கோயில் மற்றும் கேரள மாநிலங்களுக்கு அதிக அளவு மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் கோவை காந்திபுரம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

ஆம்னி பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோவை மார்க்கமாக சென்னைக்கு செல்வோர் எண்ணிக்கை நேற்றிரவு அதிகமாக காணப்பட்டது. பஸ் ஸ்டாண்ட்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் பயணிகள் எண்ணிக்கை ஏற்ப குறிப்பிட்ட வழிதடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. குறிப்பாக கோவையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

அதேபோல் மதுரை வழியாக திருநெல்வேலி மற்றும் பல்வேறு தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக கூடுதலாக பஸ்கள் விடப்பட்டன. கோவையிலிருந்து சேலம் செல்லும் வழித்தடங்களிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. பல ஆயிரம் பயணிகள் மாலை நேரத்தில் பஸ் ஸ்டாண்டுகளில் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

இதேபோல் நீலகிரி மாவட்டம் செல்ல மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகள் அதிகமாக காத்திருந்தனர். குறைந்த பஸ்கள் மட்டுமே இருந்ததால் பயணிகள் நின்ற படி பயணம் செய்ய வேண்டியிருந்தது. சிலர் போக்குவரத்து கழகத்தினரிடம் கூடுதல் பஸ் தேவை என முறையிட்டனர். பஸ்சில் இடம் பிடிக்க பயணிகள் ஓடி செல்ல வேண்டிய பரிதாப நிலையிருந்தது.

3 thoughts on “3 நாள் லீவு: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *