வாடகை தராத 10 கடைகளுக்கு மாநகராட்சி சீல்
கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் கோவை மாநகராட்சி சார்பில் வணிக கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பல கடைகளில் உரிய முறையில் வாடகை வசூலிக்கப்படுவதில்லை என புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆரோக்கியசாமி ரோடு டிபி ரோடு துடியலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாடகை தராத 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடைகளில் இருந்து 56 லட்ச ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதுவரை 26.34 லட்ச ரூபாய் வசூல்…
