கோவையில் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த 3.10 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைப்பு
கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் குலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 4.55 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான…
