போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு… 1500 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய திட்டம்
மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,498 பேரின் லைசென்ஸ் ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிமீறல் தொடர்கிறது. இதன்காரணமாக சாலைவிபத்துகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, அதிவேகம், சிக்னல் விதிமீறல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்கள், சாலைவிபத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதுபோன்ற விதிமீறல்களை ஆரம்ப…
