கேப்டன் விஜயகாந்த் ஆன்மா கட்சி தொண்டர்களிடம் இருக்கு… பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறேன். திமுக சார்பில் போட்டியிடும் வக்கீல் சுகன்யாவுக்காக நான் பிரசாரம் செய்கிறேன். அவர் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறுவார். அவங்கவங்க கூட்டணிக்காக அவங்கவங்க வந்து பிரசாரம் செய்றாங்க. கடைசியில மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. பொறுத்திருந்து பார்ப்போம், யாருக்கு வெற்றி என்று. எங்களை பொறுத்தவரைக்கும் எங்க கூட்டணி ஜெயிக்கும் ன்னுதான் நாங்க சொல்லுவோம்….
