கேப்டன் விஜயகாந்த் ஆன்மா கட்சி தொண்டர்களிடம் இருக்கு… பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறேன். திமுக சார்பில் போட்டியிடும் வக்கீல் சுகன்யாவுக்காக நான் பிரசாரம் செய்கிறேன். அவர் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறுவார். அவங்கவங்க கூட்டணிக்காக அவங்கவங்க வந்து பிரசாரம் செய்றாங்க. கடைசியில மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. பொறுத்திருந்து பார்ப்போம், யாருக்கு வெற்றி என்று. எங்களை பொறுத்தவரைக்கும் எங்க கூட்டணி ஜெயிக்கும் ன்னுதான் நாங்க சொல்லுவோம்.
யாராக இருந்தாலும் பெண்களை பற்றி தவறாக பேசுவதை எந்த காலத்திலும் அனுமதிக்கவே முடியாது. அது
எந்த பெண்ணாக இருந்தாலும் சரி. யாருக்கும் அந்த உரிமை இல்லை. பெண்களை பற்றி தரக்குறைவாக பேசுபவர்களுக்கு நிச்சயமாக என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரத்தில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக அதிகாரப்பூர்வமாக, ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் மூலமாகத்தான் இன்று ஆட்சிகளே மாறியிருக்கிறது என்பது மக்களுக்கும் தெரியும்.
எனவே, பழைய முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். இதுதான், தேமுதிகவின் நிலைப்பாடு இவிஎம் மெஷினில் நிறைய தவறுகள் நடக்கிறது. இதுபற்றி நான் பிரசாரத்தில் பேசுவேன். காந்திஜெயந்தி கிராம சபை கூட்டத்தில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இவிஎம் மெஷின் தடை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள்.
எல்லா பேருந்து கட்டணமும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. நவராத்திரி காலாண்டு விடுமுறை நாட்களில் பஸ் கட்டணம் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. இது, மக்களை மிகவும் பாதிக்கிறது. பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில், எல்லா இடத்திலேயும் மின்வெட்டு பிரச்னை இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கிறது. டாஸ்மாக் பிரச்னை, பாலியல் வன்கொடுமைகள் என பல பிரச்னைகள் இருக்கிறது. இதைப்பற்றி நாம பேசினா, இன்னைக்கு முழுக்க பேசலாம். தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 சீக்கிரம் கொடுக்க வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் வருடத்துக்கு 6 தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதையும் நிறைவேற்ற வேண்டும். இப்படி எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
அரசுத்துறை தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்பதைவிட, அந்தந்த துறை அமைச்சர்களிடம்
கேட்பது நல்லது, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள் அவர்கள்தான் அவர்களின் கருத்துக்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. முதல்வர் விஜய், இங்கு வந்து சென்றுள்ள நிலையில் அவரிடம் அரசுத்துறை தொடர்பான கேள்விகளை கேட்டிருக்கலாம்.
விஜயகாந்த் ஆன்மா பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். முதல்ல அவர், கேப்டனை நேரில் பார்த்திருக்காரா? சினிமாவுல ஸ்கிரீன்ல வேண்டுமானால் பார்த்திருப்பார். கேப்டனுடைய ஆன்மா… இங்க என்ன சுத்தி இருக்காங்க பாருங்க, எங்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள். அவர்கள்கிட்டதான் இருக்கு கேப்டன் குடும்பத்திற்கும், கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், விஜயகாந்த் ஆன்மா பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்.
அது, யாராக வேண்டுமானால் இருக்கட்டும், கேப்டன் ஆன்மாவை பற்றி பேச அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை, அருகதையும் இல்லை. ஏன்னா, அவங்க யாருமே கேப்டனை பக்கத்துலகூட பார்த்தது கிடையாது, அதனால், ஏதோ வாய்க்கு வந்ததை பேசணும்..ன்னு பேசக்கூடாது. தம்பி ஆதவ் அர்ஜூனா, இதோட அதைப்பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Super easy to navigate and the registration process took me less than a minute. It’s refreshing to find a site like zuply that doesn’t overcomplicate things for the users.