கோவை குளக்கரையில் நாற்றம்: வாக்கிங் செல்வோருக்கு குமட்டல்
கோவை குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ண குளம் போன்றவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டது. உக்கடம் வாலாங்குளத்தில் அதிக அளவு ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தது. இதனால், துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் இருந்த ஆகாய தாமரைகளை கடந்த மாதம் ஜேசிபி மூலம் அகற்றினார். பெரியகுளத்திலும் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டது. குறிச்சி குளத்தில் நீர் குறைந்து, வறண்டு போகும் நிலையில் இருக்கிறது. சாக்கடை கழிவு நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது….
