தமிழகத்தில் டாஸ்மாக் பார்களில் விரைவில் உணவு கூடம்…! அமைச்சர் விக்னேஷ் தகவல்
கோவையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:டாஸ்மாக் டெண்டர் தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. வரும் 5-ம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது அதில் விதிமுறைகளின்படி தகுதி பெறும் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படும். அதன்பிறகு சுமார் 5 அல்லது 6 நாட்கள் ஆவணப்பணிகள் நடைபெற்று, திட்டம் நடைமுறைக்கு வரும். டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பார்க்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவி…
